குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அரசனை போல வாழ்க்கை ஆரம்பிக்கும்

Guru Peyarchi Palangal: குரு பகவான் சுப பலன்களை அளிக்கும் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராசி மாற்றம் மே 1 ஆம் தேதி மதியம் 12:59 மணிக்கு நிகழப் போகிறது.

Guru Peyarchi 2024: குரு பகவான் மே 1 ஆம் தேதி மேஷ ராசியிலிருந்து விலகி ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். இது இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாகுவும். குரு பெயர்ச்சியின் காரணமாக அனைத்து 12 ராசிகளிலும் ஏற்படவுள்ள மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

1 /12

மேஷ ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலனளிக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். நீதிமன்ற விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரிகளுக்கு சாதகமாக இருக்கும்.

2 /12

ரிஷப ராசிக்கு ராஜயோகம் உண்டாகும். அபரிமிதமான முன்னேற்றத்தையும் வெற்றியையும் பெறுவீர்கள். தொழிலில் சாதகமான பலன் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகளை பெறலாம். புதிய தொழில் தொடங்க சாதகமாக நேரம். எதிர்பாராத பண வரவு உண்டாகும்.

3 /12

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க முடியும். பொருளாதார ஆதாயங்களும், பொருள் வசதிகளும் கூடும். எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு.

4 /12

கடக ராசிக்காரர்களுக்கு லாப வாய்ப்புகளைத் தரும். அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள், ஆசைகளும் அனைத்தும் நிறைவேறும். பணியில் இருந்த தடைகள் நீங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வைக் காணலாம். 

5 /12

சிம்ம ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சியால் சுப பலன்களை பெறலாம். வேலையில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறலாம். சமூகத்தில் மரியாதை கூடும்.

6 /12

குரு பெயர்ச்சி கல்வி மற்றும் தொழிலில் வெற்றியைத் தரும். வேலையில் பதவி உயர்வைப் பெறலாம். தொழில் வல்லுநர்கள் நிதி ஆதாயங்களையும் புதிய வாய்ப்புகளையும் பெறலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறலாம்.

7 /12

துலாம் ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தைரியம் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு சாதகமான நேரம். முதலீட்டில் லாபம் கிடைக்கும். புதிய வீடு, நிலம் வாங்க இது உகந்த நேரம்.

8 /12

விருச்சிக ராசிக்கு அதிகப்படியான வருமானத்தைப் பெறலாம். பண வரவு உண்டாகும். பொருளாதார நிலை மேம்படும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த வாகனம் வாங்கும் அதிர்ஷ்டம் உண்டாகும்.

9 /12

தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அனுகூலமான பலன் கிடைக்கும். இந்தக் காலகட்டத்தில் தன்னம்பிக்கை அதிகரித்து தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் முன்னேற்றம் ஏற்படும்.

10 /12

எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறலாம். செல்வம் உயரும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். ஆளுமை மேம்படுத்த முடியும். வேலை அல்லது வணிகத்திற்காக பயணம் செய்யலாம். சிக்கிய பணம் கிடைக்கும். அரசியலில் வெற்றி பெறலாம்.

11 /12

கும்ப ராசிக்கு குரு பகவானின் அருளால் வெற்றி கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வும், சம்பளம் உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

12 /12

மீன ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். வணிகத்தில் லாபம் பெருகும். பணி இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கலாம். ஆரோக்கியம் மேம்படும்.