மார்ச் 15ம் தேதியுடன் ’எதிரி கிரகங்களின்' கூட்டணி முடிவுக்கு வருவதால், பல ராசிக்காரர்களுக்கு ஆசுவாசம் ஏற்படும். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரிய பகவான் தனது ராசியை மாற்றுகிறார். மார்ச் 15ல் சூரியன் மீன ராசியில் பிரவேசிக்க உள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சில ராசியினருக்கு மிகுந்த நிம்மதி கிடைக்கும். மறுபுறம், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சூரியனைப் போல பிரகாசிக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சூரியன் தற்போது கும்ப ராசியில் இருந்து மீன ராசியில் பிரவேசிக்கப் போகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல ராசிக்காரர்கள் சூரியன் மீனத்தில் நுழையும் போது சுப பலன்களைப் பெறுவார்கள். பதவி உயர்வு மற்றும் பண ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தக் காலகட்டத்தில் பல ராசிக்காரர்களின் உறவுகளில் மலர்ச்சி ஏற்படும். . 


கிரகங்களின் அரசனான சூரியன், மார்ச் 15-ம் தேதி காலை 6.58 மணிக்கு கும்பத்தில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கப் போகிறார். ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்த ராசியில் இருக்கப் போகிறார். அதன் பிறகு சூரியன் மேஷ ராசியில் நுழைகிறார். இதனால், சனியுடன் இருந்த கூட்டுறவை விட்டு வெளியேறுகிறார் சூரியன். இதனால், நாலு பேருக்கு, அதாவது நான்கு ராசிக் காரர்களுக்கு நல்லது நடக்கும்.


மேலும் படிக்க | Sun transit: பங்குனி மாதத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! ஜாக்பாட் லக்


இந்த ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சிறப்பான பலன்களைத் தரும்


ரிஷபம்


ஜோதிட சாஸ்திரப்படி சூரியன் ரிஷப ராசியின் பதினோராம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது நிதி ஆதாயம் மற்றும் ஆசைகளுக்கான வீடாக கருதப்படுகிறது. மார்ச் 15 அன்று மீனத்தில் சஞ்சரிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். செய்யும் முதலீடுகள் நன்மை தரும். அதே சமயம் வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவதும் இந்தக் காலத்தில் சாத்தியமாகும்.


விருச்சிகம்


சூரியன் இந்த ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த வீடு அன்பு, குழந்தைகள் மற்றும் கல்வியைக் குறிக்கும் என்று கருதப்படுகிறது. சனியிடம் இருந்து பிரியும் சூரியன், விருச்சிக ராசிக்கு பல நன்மைகளைக் கொடுப்பார். சம்பளம் கூடும், வருமானம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களும் வெற்றி பெறுவார்கள்.


மேலும் படிக்க | Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?


கும்பம்
 
சூரியப் பெயர்ச்சியின் சுப பலன் கும்ப ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும். கும்ப ராசிக்காரர்களுக்கு குடும்பத்துடனான உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமணமாகாதவர்களுக்கும் திருமண வாய்ப்புகள் வாசல் தேடி வரும்.


மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு பல விதங்களிலும் வெற்றித் தரும் சூரியப் பெயர்ச்சி இது. இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த பணிகளுக்கு பாராட்டுகள் வந்து குவியும். மேலும், இந்த காலகட்டத்தில் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கும்பத்தில் சூரியன்! சில ராசிகளுக்கு சஞ்சலம்... சில ராசிகளுக்கு சந்தோஷம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ