Sun transit: பங்குனி மாதத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! ஜாக்பாட் லக்

Sun Transit In March 2023: தமிழ் ஆண்டின் இறுதியாக வரும் சூரியப் பெயர்ச்சி, யாருக்கெல்லாம் நல்லது? யாருக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? பங்குனி மாதத்தை தொடங்கி வைக்கும் சூரியனின் சஞ்சாரம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 10, 2023, 02:35 PM IST
  • தமிழ் ஆண்டின் இறுதியாக வரும் சூரியப் பெயர்ச்சி
  • யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
  • பங்குனி மாதத்தை தொடங்கி வைக்கும் சூரியனின் சஞ்சாரம்
Sun transit: பங்குனி மாதத்தில் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்! ஜாக்பாட் லக் title=

Surya Gochar March 2023: இந்த மார்ச் மாதத்தில் வியாழன் ராசியில் வரும் சூரியன் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. தமிழ் ஆண்டின் கடைசி மாதமான பங்குனியின் தொடக்கத்தை தொடங்கி வைக்க ராசி மாறுகிறார் சூரியன். சூரிய பகவானின் இந்த ராசி மாற்றத்திற்கு பிறகு, அடுத்து வரும் சூரியப் பெயர்ச்சியானது, புதிய தமிழ் புத்தாண்டின் தொடக்கமாக இருக்கும். இன்னும் நான்கு நாட்களில் நடைபெறவிருக்கும் சூரியப் பெயர்ச்சியால் பண வரவால் நிம்மதியும், மகிழ்ச்சியும் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மீன ராசியில் மார்ச் 15 அன்று, சூரியன் மாற்றமாகிறார். வியாழன் மற்றும் சூரியன் என இந்த இரண்டு கிரகங்களும் மிகவும் சக்திவாய்ந்ததாக கருதப்படுகின்றன. சூரிய பகவானின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். சூரியனின் இந்த சஞ்சாரத்தால், அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் மற்றும் வாழ்க்கையில் மகிழ்ச்சி வரும்.

மேலும் படிக்க | Astro: ‘இவற்றை’ செய்தால் வாழ்க்கையில் என்றென்றும் சுக்கிர திசை தான்!

பங்குனி மாதத்தில் செல்வச் செழிப்பில் திளைக்கும் ராசிகள்

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த சூரியனின் சஞ்சாரம் நிதிப் பலன்களைத் தரும். இந்த காலகட்டத்தில், வாகனம் மற்றும் சொத்துக்களினால் மகிழ்ச்சி வந்து சேரும். ரிஷப ராசியினருக்கு இந்தப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தம்பதிகளுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். காதல் கைகூடும்.

மிதுனம்

சூரியனின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு குதூகலத்தைக் கொடுக்கும். செய்யும் தொழிலில் நிம்மதியும் அனுகூலமும் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடன்பிறந்தவர்களுடன் தொழில் தொடங்குவது பற்றி யோசிக்கும் அளவுக்கு நெருக்கம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் ஏற்படும். தந்தையின் முழு ஆதரவையும் பெறும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சூரியனின் சஞ்சாரத்தால், மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். பணியிடத்தில் எதிரிகளால் கூட உங்களுக்கு தீங்கு செய்ய முடியாது. தொழில் ரீதியாக, இந்த காலம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

மேலும் படிக்க | சதயத்தில் சனி பகவான்! வரும் 7 மாதங்கள் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
 
விருச்சிகம்

சூரியனின் சஞ்சாரத்தால் விருச்சிக ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருக்கப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில், நிதி நன்மைகள் மற்றும் சம்பளமும் அதிகரிக்கும். மாணவர்களுக்கும் அனுகூலமான காலம் இது. இலக்கில் அதிகமாக கவனம் வைத்தால் வெற்றி உங்களுடையதே.

மீனம்

சூரியன் மீன ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, உங்கள் முடிவுகளை எடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும். மற்றவர்கள் உங்கள் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்கள். யாராவது உங்களுக்கு அறிவுரை வழங்கினால், அதை கவனமாகக் கேளுங்கள். பணியிடத்தில் நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Mercury Transit: புதன் பெயர்ச்சியால் காதல் கைகூடும்! தொட்டதெல்லாம் துலங்கும் மீன ராசிக்காரரே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News