பித்ருகளுக்கு மிகவும் உகந்த நாளான அமாவாசை மாதம் ஒரு முறை வரும் என்றாலும், ஒரு ஆண்டில் வரும் மூன்று அமாவாசைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியவை மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக் கருதப்படுகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமாவாசை நாள் அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதன் மூலம், பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெறலாம். அமாவாசை திதி அன்று பித்துக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும், புனித நதிகளில் நீராடுவதும், ஏழைகள், அந்தணர்களுக்கு அன்னதானங்கள் செய்வதும் தோஷங்கள் அனைத்திலும் இருந்து நிவாரணம் அளிக்கும் என்பது ஐதீகம். 


ஜனவரி 28ம் தேதி இரவு 8.10 மணி முதல் 29ம் தேதி இரவு 7.21 மணி வரை இந்த அமாவாசை திதி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று, ஜனவரி 29ம் தேதி வரும் தை அமாவாசை தினத்தில், பித்ருக்களின் ஆசியை முழுமையாக பெறவும் தோஷங்கள் அனைத்தும் நீங்கவும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றி அறிந்து கொள்ளலாம்.


சூரியனும், சந்திரனும் நேர்கோட்டில் வரும் அமாவாசை  நாளில் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. சூரியனும், சந்திரனும் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ளும் தினத்தன்று முன்னோர்கள் புண்ணிய லோகத்திலிருந்து பூமிக்கு வருகிறார்கள் என்பது ஐதீகல். 


அமாவாசை நாளில் செய்ய வேண்டியவை


1. அமாவாசை நன்னாள் அன்று பித்ரு தர்ப்பணம் செய்வதும், பிண்ட தானம் செய்வதும், நீத்தாரின் ஆசிகளை பரிபூரணமாக பெற உதவும். தர்ப்பணம் செய்வதால் இறந்த ஆன்மாக்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மோட்சம் பெறுவார்கள். இதனால், நம் சந்ததியினர் அனைவருமே சந்தோஷமாக இருப்பார்கள்.


2. பித்ருக்களின் புகைப்படம் முன்பு படையலிட்டு  தீபாராதனை காட்ட வேண்டும். படையலிட்ட உணவை காகம், பசு, எறும்புகள் ஆகியவற்றுக்கு கொடுப்பது முன்னோர்கள் ஆசி பெற உதவும்.


3. ஏழைகளுக்கு, அந்தணர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் நல்லது. அந்தணர்களுக்கு உணவு, ஆடை,  தட்சனை ஆகியவற்றை வழங்குவது  பித்ருக்களின் மனதை மகிழ்விக்கும்.


4. தை அமாவாசை நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும், பலன் அளிக்கும். இதனால், வாய்ப்பிருப்பவர்கள் அங்கு செல்லலாம்.


5. தோஷங்கள் அனைத்தும் நீங்க நல்வாழ்வு பிறக்கும் அமாவாசை நன்னாளில், காலையில் குளித்து, அரச மரத்தை சுற்றி வருவதால் தோஷங்கள் நீங்கும்.


அமாவாசை அன்று செய்யக் கூடாதவை


பாவங்களை போக்கி பித்ருக்களின் ஆசியை முழுமையாக அமாவாசையில் செய்யக் கூடாதவை:


1. எவர் மனதும் மனம் புண்படும் படி நடக்கவோ கூடாது. பிறர் மனம் நோகும் வகையில், கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்த கூடாது.


2. அமாவாசை  நாளில் முன்னோர்கள், கடவுளுக்கு உணவை படைத்த பின்னரே உணவை உண்ண வேண்டும். 


3. அமாவாசை நாளில் குளிக்காமல் இருக்க கூடாது. காலையில் சீக்கிரம் எழுந்து குளிப்பது சிறந்தது. 


4. அமாவாசை நாளில் மறந்தும் கூட இறைச்சி, மது பானம் ஆகியவற்றை அருந்தக் கூடாது. அன்றைய தினம் முழுவதும் வீட்டில் முழுக்க முழுக்க சைவ உணவு மட்டுமே இடம் பெற வேண்டும். உடல் உறவு கூடாது. 


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | தை அமாவாசை: தினசரி ராசிபலன்... இன்று இந்த 3 ராசிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ