நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர் உண்டு. இந்த எண் கணிதம் ஒருவரின் எதிர்காலத்தை எளிதாக கணிக்க முடியும். அதிலும் இன்றைய காலக்கட்டத்தில், ஜோதிடத்தில் இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும். அதன்படி ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூற ஜோதிடத்தில் உள்ள கிரக நிலைகள் உதவி புரிகின்றன. இது தவிர எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படும் எண் கணிதத்தைக் கொண்டும் எதிர்காலத்தை அறியலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு சனி பகவானின் ஆண்டாகும். ஏனெனில் சனி சுப மற்றும் வலுவான ஸ்தானத்தில் இருந்தால் பாமரனைக் ராஜாவாகவும், ராஜாவை பாமரனாகவும் மாற்றும். சனீஸ்வரர் தனது செயல்களுக்கு ஏற்ப பலன்களைக் கொடுக்கும் கடவுள், எனவே அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். எண் கணிதத்தில், சனி எண் 8 இன் அதிபதி என்று விவரிக்கப்படுகிறது. எண் கணிதத்தில், 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகங்களின் ஆதிக்கத்தைக் கொண்டவை. இந்த கோள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வங்களைக் குறிக்கின்றன. மேலும் ஒவ்வொரு எண்ணிற்கு உரியவர்கள் அந்த எண்ணிற்கு உரிய தெய்வங்களின் ஆசியை பெற்றிருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில், இந்த ஆண்டு எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு சனியின் சிறப்பு அருள் கிடைக்கும் என்று பார்ப்போம்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: பதவி உயர்வு, பணபலம் சேரக்கூடிய அதிர்ஷ்டசாலி ராசிகள் இவைதான் 


எண் 6: 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6 ஆகும். 2024 ஆம் ஆண்டு 6 ஆம் எண் கொண்டவர்களுக்கு அற்புதமாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும், அதுமட்டுமின்றி சம்பள உயர்வையும் நீங்கள் பெறுவீர்கள். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் நல்ல போதுமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.


எண் 8: 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8 ஆகும். இந்த எண்ணின் அதிபதி சனி பகவான் ஆவார். அதே போல் இந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டிற்குரிய எண்ணும் 8 என்பதால், இந்த ஆண்டில் சனி பகவானின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இந்த எண்ணில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வேலையையும் நிதானமாக வெற்றி காண்பீர்கள். காதலிப்பவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள போதுமான நேரத்தை ஒன்றாக செலவிட வேண்டும். திருமண வாழ்க்கை இந்த ஆண்டு நன்றாக இருக்கும். நண்பர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.


எண் 7: 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7 ஆகும். இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு 2024ம் ஆண்டு சிறப்பாக இருக்கும். தடைபட்ட வேலை அனைத்தும் வேகமாக முடிவடையும், வெற்றி குவியும். ஆரோக்கியத்தை கவனித்து, மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். தொழிலில் சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம். இளமை காலத்தில் மிகுந்த சிரமங்களையும், போராட்டங்களையும் சந்திப்பார்கள். அடிக்கடி வேதனைகளும், சோதனைகளும் இவர்களைத் தொடர்ந்து வரும். 


எண் 5: 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5 ஆகும். 2024 ஆம் ஆண்டு 5 ஆம் எண் கொண்டவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். வெளியூர் பயணம் செய்வீர்கள். நிதி நிலை வலுவாகி வங்கி இருப்பு அதிகரிக்கும். புதிய ஆடைகள், நகைகள் போன்றவற்றை வாங்க ஆர்வம் அதிகரிக்கும். தவறுகளை மன்னித்து வாழ முயற்சித்தால், காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை சாதாரணமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro Traits: அறிவாற்றலை அள்ளிக் கொடுக்கும் புதனின் ஆசி பெற்ற ‘4’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ