ஆளுமை திறன் என்பது கவர்ச்சி, உறுதிப்பாடு மற்றும் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையாகும். 12 ராசிகளில், பலர் ஆளுமை திறனின் அறிகுறிகளை கொண்டிருப்பர். ஆனாலும், ஒரு சில ராசிகளுக்கு மட்டுமே அந்த திறன் அசால்டாக வரும். அந்த வகையில், ஆளுமை திறன் நிறைந்த, சிறந்த தலைவர்களாக வரக்கூடிய ராசிகளை பார்க்கலாம், வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.மேஷம்:


பிறப்பிலேயே ஆளுமை திறன் பொருந்தியவர்களாக இருப்பவர்கள், மேஷ ராசிக்காரர்கள். இவர்களில் பலருக்கு பயம் என்பதே இருக்காது. தலைமை பொருப்பை அனுபவித்து செய்யும் ஆளாக இருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். மேஷ ராசிக்காரர்கள், ஆபத்துகளை பார்த்து அஞ்சாதவர்களாக இருப்பர். முடிவுகளை பகுத்தறிந்து எடுப்பதிலும் பிறருக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதிலும் இவர்கள் முன்னோடியாக இருப்பர்.இவர்களின் தனித்துவமான இந்த ஆளுமை திறன் இவர்களை பெரிய தலைவர்களாக உருவெடுக்க வைக்கும். 


மேலும் படிக்க | சனிக்கிழமை இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்க... பணக்காரர் ஆவதை யாராலும் தடுக்கவே முடியாது!


2.சிம்மம்:


சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறரை எளிதில் வசீகரிக்கும் தன்மை இருக்கும். இவர்களுக்கு இயல்பிலேயே பலரை தனது பேச்சை கேட்க வைக்கும் திறனும் இருக்கும். தன்னம்பிக்கை அளிக்கும், படைப்பாற்றலை பறைசாற்றும் வகையிலான தலைமை பொறுப்பில் இவர்கள் நன்றாக செயல்படுவார்கள். பல்வேறு துறைகளில் சிறந்த தலைவர்களாக இருக்கும் இவர்களுக்கு கீழ் வேலை பார்ப்பதால் பலர் உற்சாகம் அடைவர். இது, இவர்களை சிறந்த தலைவர்களாக உருவெடுக்க வைக்கும். 3.விருச்சிகம்:


3.விருச்சிகம்:


தங்களது கனவையும் லட்சியத்தையும் நோக்கி ஓடுவதில் கில்லாடியாக இருப்பர். தனது வருங்காலத்தை பற்றி பெரிதான புரிதலுடன் இவர்கள் உலா வருவதால், இவர்களை பின்தொடர்வதற்கென்று ஒரு தனி கூட்டம் உருவாகும். இது, இவர்களையே அறியாமல் உருவாக்கும் கூட்டம் ஆகும். தங்களது வழியில் என்ன தடங்கள் ஏற்பட்டாலும் அதை தவிடு பொடியாக்கி முன்னேற்ற பாதையை தேடுபவர்களாக இருப்பவர்கள், விருச்சிக ராசிக்காரர்கள். தனித்துவமான யோசனை திறன், சிக்கல்களை கையாளும் விதம் போன்றவை இவர்களை மிகச்சிறந்த தலைவர்களாக உருவாக்கும். 


4.மகரம்:


தனது வேலையிலும், தனக்கென இருக்கும் பணிகளிலும் அதீத கவனத்துடன் செயல்படுபவர்கள், மகர ராசிக்காரர்கள். தொழில்முறை வாழ்வில் தனிப்பட்ட வாழ்க்கையை இணைக்க விரும்பாத இவர்கள், தனக்கென ஒரு வட்டத்தை போட்டுக்கொள்ளாமல் எல்லா வகையிலும் சாதிக்க வேண்டும் என்று யோசிப்பர். இவர்களிடம் ஒழுக்கம், பொறுப்பு, வெற்றி இலக்கிற்கான தெளிவான பார்வை ஆகியவை அடங்கியிருக்கும். இவர்களுக்கு இதனாலேயே ஆளுமை திறன் எளிதில் வந்துவிடும். இவர்களுக்கு கீழ் செயல்படுவோரும் இவர்களால் பெரிதும் ஈர்க்கப்படுவர். சிறந்த ஆளுமை திறன், நற்பண்புகள் உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அடக்கிய சிறந்த தலைவர்களாக உருவாக, மகர ராசிக்காரர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. 


மேலும் படிக்க | ‘கணேசனை நினை..’ விநாயகரை வழிபடுவதால் ‘இந்த’ 8 பலன்கள் கிடைக்கும்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ