மகர ராசிக்குள் நுழையும் சனி; 2025ம் ஆண்டு வரை இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான்

சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2022, 12:53 PM IST
  • சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார்.
  • குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.
  • சனி பகவான் சுமார் 6 மாதங்கள் மகர ராசியில் இருப்பார்.
மகர ராசிக்குள் நுழையும் சனி; 2025ம் ஆண்டு வரை இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் தான் title=

சனி பகவான் கும்ப ராசியில் இருக்கும் நிலையில், சனி பகவான் ஜூலை 12, 2022 அன்று, சனி மகர ராசிக்கு பெயர்ச்சியாவார். அதன் பிறகு மீண்டும் ஜனவரி 17 அன்று, சனி கும்ப ராசிக்கு மாறுவார். சனி பகவானின் இந்த நிலை மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும்.இதனால், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு சமூக, பொருளாதாரம், குடும்ப வாழ்க்கை போன்ற அனைத்திலும், சனி பகவானின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். 

சனியின் ராசி மாற்றம் இந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடக்கிறது. சனி ஒரே நேரத்தில் அல்ல, இரண்டு கட்டங்களில் ராசியை மாற்றுகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி சனி கும்ப ராசியில் பிரவேசித்ததும் முதல் கட்டம் தொடங்கியது.

இப்போது சனி ஜூன் மாதத்தில் வக்ர பய்ர்ச்சியானது. இதன் பிறகு ஜூலை 12ம் தேதி மீண்டும் மகர ராசிக்கு சனி பிரவேசிக்க உள்ளது. சனி பகவான் சுமார் 6 மாதங்கள் மகர ராசியில் இருப்பார். 

ஆறு மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 17, 2023 அன்று, சனி மீண்டும் கும்ப ராசியில் பிரவேசிக்கிறார். இதற்குப் பிறகு, 2025 மார்ச் 29 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இப்போது சனி ஜூலை 12-ம் தேதி மகர ராசிக்கு செல்கிறார். இந்த மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு 2025 வரை ஜாக்பாட் யோகம் அடிக்கும். 

மேலும் படிக்க | Astro: ஜாதகத்தில் சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

விருச்சிக ராசி

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் நல்லது. வெளியூர் பயணம் செல்லலாம். இந்த பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அளிக்கும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பல இடங்களிலிருந்து பண வரவு கிடைக்கும். இதன் காரணமாக நிதி நிலை வலுவாக இருக்கும். வியாபாரத்தில் தொடர்ந்து சரிவை சந்தித்தவர்கள் லாபம் ஈட்டத் தொடங்கும் நேரம் இது. அன்னை மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எனினும் நீங்கள் புத்திசாலித்தனமாக முதலீடு செய்ய வேண்டும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அருளை அள்ளி வழங்குவார். நீங்கள் ஒருவருக்கு நல்லது செய்திருந்தால், சனி தேவன் உங்களுக்கு நல்ல பலனைத் தருவார். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வெற்றி தரக்கூடிய அதிர்ஷ்டம் அமையும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைத்து, உங்கள் வாழ்க்கையில் ஏற்படும். நீண்ட காலமாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

மீன ராசி

மீன ராசிக்காரர்களுக்கு, சனி தேவன் வேலை மற்றும் வியாபாரம் இரண்டிலும் வெற்றியை அள்ளித் தருகிறார். கடின உழைப்புக்கான முழு பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் உணர்ந்து, பணியிடத்தில் பெயரும் புகழும் கிடைக்கும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பும் உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News