பலருக்கும் தலைமைத்துவம் என்பது மிகவும் முக்கியமானதாகும். ஒரு நபரின் வாழ்வில் அவர் வெற்றி பெருகிறாரோ, தோல்வி அடைகிறாரோ அதை தலைமைத்து பண்பே தீர்மானிக்கும். பல துறைகளில் பெரிய பதவிகளை அடைய தலைமைத்துவ பண்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இருக்கும் 12 ராசிகளில், அனைத்து தரப்பினருக்கும் தனித்துவமான பண்புகளும் திறன்களும் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட சில ராசியினருக்கு மட்டும் இந்த தலைமைத்துவ பண்பு பிறக்கும் போதே இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா? 


1.மேஷம்:


12 ராசிகளுள் முதன்மையானவர்களாக கருதப்படுபவர்கள், மேஷ ராசியை சேர்ந்தவர்கள்தான். பிறரை தன் பேச்சை கேட்க வைக்க வேண்டும் என்பது இவர்களது எண்ணமாகவே இருக்காது. ஆனாலும், இவர் பேசினாலே அதை கேட்பவர்கள் சொக்கு பொடி போட்டது போல அதன்படி நடக்க ஆரம்பித்து விடுவர். மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர். இவர்களுக்குள் இருக்கும் அனல் போன்ற சக்தியை யாராலும் மறுக்க முடியாது. அது மட்டுமன்றி பிறரை விட தனித்துவமாக தெரிவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாக விளங்குவர். அதனாலேயே இவர்களை தேடி தலைமை பண்பு வந்து சேரும். 


2. ரிஷபம்:


தனக்காக சில கட்டமைப்புகளை விதித்துக்கொண்டு அதன்படி வாழ்பவர்கள், ரிஷப ராசிக்காரர்கள். இவர்கள், தங்களது வாழ்க்கையை தனக்கு பிடித்தார் போல வாழ்வார்கள். தனது வாழ்க்கை மற்றும் அது சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதில் இவர்களுக்கு பயங்கர தெளிவு இருக்கும். ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு பிறரை எப்படி தன் பேச்சை கேட்க வைக்க வேண்டும் என்பது தெரியும்.  தன் கையில் இருக்கும் அதிகாரத்தை எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதையும் கற்று தேர்ந்தவர்களாக இருப்பர். தனக்கு தேவையானது கிடைக்கும் வரை, தனது முயற்சியை நிறுத்தவே மாட்டார்கள். இவர்களால், இவர்களை சுற்றி இருப்பவர்களும் மென்மேலும் வளர்வர்.


மேலும் படிக்க | அமாவாசை அன்று இரவில் இந்த பரிகாரங்களை செய்யுங்கள்! தோஷம் நீங்கும்!


3.சிம்மம்:


ஒரு சிறந்த தலைவனாக இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு இருக்கும். சிம்ம ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை, அன்பு மற்றும் உணர்ச்சிகள் நிறைந்தவர்களாக இருப்பர். இவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ விரும்புகிறார்கள். கனிவாக இருப்பதைத் தவிர, அவர்கள் பிறர் வாழ்விலும் வெளிச்சம் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களாக இருப்பர். எனவே உலகத் தலைவராக உயரத்தை அடைவது அவர்களுக்கு நிச்சயமாக பொருந்தும்.


4.கன்னி:


கன்னி ராசிக்காரர்களிடம் தலைமை பண்புகள் அதிகரித்து காணப்படும். இவர்கள் மற்றவர்களுக்கு கட்டளையிடும் இயல்பான திறனைக் கொண்டுள்ளனர். கன்னி ராசிக்காரர்கள் மிகவும் பகுப்பாய்வு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட மனதைக் கொண்டுள்ளனர். இது ஒரு நல்ல தலைவரின் பண்புகளாகும். கன்னி ராசிக்காரர்கள் நெறிமுறைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவார்கள்.


5.தனுசு:


தனுசு ராசிக்காரர்கள் சிந்தனைமிக்கவர்களாகவும் மிகவும் அன்பானவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள், மற்றவர்களைப் பற்றி ஆழ்ந்த அக்கறை காட்டும் குணாதிசயம் நிறைந்தவர்கள். இது அவர்களை ஒரு சிறந்த தலைவராக மாற்றுகிறது. இந்த உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான வழிகளை அவர்கள் தொடர்ந்து சிந்தித்து கொண்டே இருக்கின்றனர். அவர்கள் மக்களுக்கு உதவ தங்கள் வழியில் செல்கிறார்கள், இது தானாகவே அவர்களை மிகவும் அன்பான, நேர்மறை மற்றும் ஒழுக்கமான நபராக ஆக்குகிறது.


மேலும் படிக்க | உச்சம் செல்லும் குரு.. இந்த ராசிகளுக்கு 2024 ஆம் ஆண்டு பொற்காலம்


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | கணவனின் ஆயுளை கூட்டும் சோமவதி அமாவாசை..! வழிபாட்டு முறை, நல்ல நேரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ