2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசி!

தனுசு ராசிக்கான வருடாந்திர ராசிபலன் 2023: புதிய ஆண்டு 2023 தனுசு ராசிகளுக்கு மகத்தான ஆண்டாக இருக்கும். ஏழரை நாட்டு சனியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த ராசிகள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 21, 2022, 04:52 PM IST
  • ராசிக்கு அதிபதியான வியாழ பகவான் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக கவனித்துக் கொள்வார்.
  • வேலையில் கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும்.
  • ஜனவரி மாதம் குடும்பத்தில் சில நல்ல செய்திகள் வந்து சேரும் வாய்ப்பு கிடைக்கும்.
2023 வருட பலன்: பட்ட கஷ்டம் போதும்... நிம்மதி பெருமூச்சு விடும் தனுசு ராசி! title=

தனுசு ராசிக்கான வருடாந்திர ராசிபலன் 2023: புதிய ஆண்டு 2023 தனுசு ராசிகளுக்கு மகத்தான ஆண்டாக இருக்கும். ஏழரை நாட்டு சனியினால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்த ராசிகள் இனி நிம்மதி பெருமூச்சு விடலாம். வீட்டின் நிலவி வந்த கடுமையான சூழ்நிலை மாறிஅன்புடனும் இணக்கத்துடனும் மகிழ்ச்சியாக இருக்கும். எனினும் கிரகங்களின் நிலை காரணமாக பெற்றோரின் ஆரோக்கியம் கெடும். 2023க்கு எப்படி திட்டமிடுவது என்று ஆலோசித்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் விஷயத்தில் சிறிது கவனம் தேவை, பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படலாம் என்பதால், குழந்தைகளின் சகவாசத்தில் கவனமாக இருக்க வேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு பேணப்பட வேண்டும். வாழ்க்கைத்துணையுடன் நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும். 

இல்லற வாழ்க்கை

இந்த ஆண்டு தனுசு ராசிக்காரர்கள் குடும்ப வாழ்க்கையைப் பற்றி அதிகம் யோசிப்பார்கள்.  ஆண்டின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு அதிபதியான வியாழ பகவான் உங்கள் குடும்ப வாழ்க்கையை சிறப்பாக கவனித்துக் கொள்வார், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். ஜனவரி மாதம் குடும்பத்தில் இருந்து சில நல்ல செய்திகள் வந்து சேரும் வாய்ப்பு கிடைக்கும். ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் தாயின் உடல்நிலை  மோசமடையக்கூடும், ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு சூழ்நிலைகள் மாறி படிப்படியாக தாயின் ஆரோக்கியம் மேம்படும். தந்தையுடனான உறவு மோசமடைந்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மாறாக ஏப்ரல் முதல் மே வரை உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளும் அவரையும் சூழ்ந்துகொள்ளலாம். அக்டோபர் முதல் டிசம்பர் வரை, நிலைமை நன்றாக இருக்கும் மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் அனுபவிப்பீர்கள்.

தொழில் வாழ்க்கை

புத்தாண்டில் தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தை காணலாம். தடைகள் நீங்கி, உங்கள் கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு வந்து சேரும். வேலையை மாற்ற நினைப்பவர்கள் வாய்ப்புகள் தானாகவே வந்து சேரும்.

மேலும் படிக்க | மார்கழி அமாவாசையில் ‘விருத்தி’ யோகம்; ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்! 

ஆரோக்கியம்

பிள்ளைகளின் கல்வியில் சற்று அக்கறை காட்ட வேண்டி இருக்கும். இந்த ஆண்டு உடல்நலம் குறித்து கவனம் தேவை. ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், குழந்தைகளுக்கு உடல் பிரச்சனைகள் வரலாம். எனவே அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். உடல்நிலை காரணமாக படிப்பிலும் தடைகள் ஏற்படலாம். இத்தனைக்குப் பிறகும், ஆண்டின் கடைசி மூன்று மாதங்கள் குழந்தைகளுக்கு நல்லதாக இருக்கும். மேலும் அவர்களின் ஆரோக்கியமும் மேம்படும்.

மேலும் படிக்க | சுக்ரன் பெயர்ச்சியும் மாளவ்ய ராஜயோகமும்! 3 ராசிகளுக்கு சுகபோக வாழ்க்கை அமையும்!

திருமண வாழ்க்கை

புத்தாண்டில் திருமண வாழ்க்கையைப் பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. திருமண வாழ்க்கையில் காதல் இருக்கும். ஒருவருக்கொருவர் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்பு பெருகும். நீங்கள் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கத்துடன் இருக்க முடியும், அதே போல் உங்கள் வேலையில் வாழ்க்கைத் துணை ஒரு பங்காளியாக இருப்பார். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் உதவியால் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் நீங்கள் வெற்றியை அடைய முடியும். குறிப்பாக இந்த ஆண்டு உங்கள் மனைவியிடமிருந்து நல்ல ஆதரவு கிடைப்பதை காண்பீர்கள். வருடத்தின் கடைசி மாதங்களில் குழந்தைப் பேறு பெற விரும்புவோருக்கு நல்ல செய்தி வந்து, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் கவனமும் உங்களை நோக்கியே இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கும்பத்தில் சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட் நன்மைகள், வாழ்க்கை பிரகாசிக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News