காதல் செய்வதும் காதலில் விழுவதும் எளிதான காரியம் அல்ல. ஒரு சிலருக்கு ஒரு காதல் முறிவிற்கு பிறகு இன்னொரு காதல் எளிதாக வந்து விடும். ஒரு சிலருக்கு பிறரை நம்புவதற்கே நேரம் எடுக்கும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் காதல் செய்யவும் தெரியும் அழகாக அதை பாதுகாக்கவும் தெரியும். ஆனால், ஒரு சில ராசியை சேர்ந்தவர்களால் மட்டுமே பல காதல் முறிவுகளுக்கு பிறகும் மீண்டும் ஆழமாக காதலிக்க முடியும். அந்த ராசியை சேர்ந்தவர்கள் யார்? இங்கே பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.கடகம்:


கடக ராசிக்காரர்கள் அவர்களின் உள்ளுணர்வையும் உணர்ச்சிகளையும் மதிப்பவர்களாக இருப்பர். ஒரு காதல் தங்களது இதயத்தை உடத்தாலும் எப்போதும் பிறருக்காக தங்கள் இதயத்தை திறந்து வைத்திருக்கும் திறமை, கடக ராசியை சேர்ந்தவர்களுக்கு உண்டு. தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மீது அத்தனை அன்பும் பாசமும் வைத்திருக்கும் ராசிக்காரர்கள் இவர்கள். அவர்களுடன் நல்ல தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பர். இவர்கள் மூளை சொல்வதை கேட்டு நடப்பவர்களாக இருக்க மாட்டார்கள். மனம் எந்த வழியில் செல்ல சொல்கிறதோ, அந்த வழியில்தான் செல்வர். இதனால் இவர்களுக்கு பல முறை காதல் தோல்வி ஏற்பட்டாலும், மீண்டும் மீண்டும் எழுந்து தனக்கு ஏற்ற காதலுக்காக காத்திருப்பர். 


2.கும்பம்:


கும்ப ராசியை சேர்ந்தவர்கள், அவர்கள் உருவாக்கிய உலகில் மூழ்கியிருப்பர். எப்போதும் தனக்கான வேலையை பார்த்துக்கொண்டு, தனிச்சையாக செயல்படுவர். இவர்களுக்கும் காதலிக்க வேண்டும் என்ற ஆசை ஆழ் மனதிற்குள் ஒளிந்திருக்கும். பிடித்தவருடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்வர். இவர்களுக்கு ஒரு காதல் முறிவு ஏற்பட்டால், அவர்களிடம் இருந்து பெரும்பாலும் தள்ளியிருப்பர். தனது முந்தைய காதல் உறவில் ஏற்பட்ட தப்பு அடுத்த உறவில் ஏற்பட்டு விட கூடாது என மிகவும் தெளிவாக இருப்பர். தனது தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக்கொண்டு, அதை அடுத்த முறை சரி செய்து கொள்வர். 


மேலும் படிக்க | ‘இந்த’ 6 ராசிக்காரர்களுக்கு அவர்களின் மாமியாருடன் ஒத்து போகாது..! யார் அவர்கள்..?


3.மீனம்:


தங்களது எதிர்காலம் குறித்து நல்ல புரிதலையும் நோக்கத்தையும் கொண்டுள்ளவர்கள், மீன ராசிக்காரர்கள். கனவுலகில் வாழ்ந்தாலும் அதை எப்படி நடைமுறையில் செயல்படுத்த வேண்டும் என்ற ஆழ்ந்த அறிவையும் கொண்டிருப்பர். உலகை ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையில் பார்ப்பர். ஆனால், மீன ராசிக்காரர்களுக்கான உலகே தனியாக இருக்கும்.  தற்போது உள்ள உலகில், நல்ல இதயம் கொண்ட ஒரு சிலரில் இவர்களும் இருக்கின்றனர். எத்தனை முறை காதல் வந்தாலும் ஒவ்வொரு முறையும் இவர்கள் ஆழமாக காதல் செய்வர். எத்தனை முறை காதலில் தோற்று போயிருந்தாலும் அடுத்த காதலுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும் உள்ளம் இவர்களுக்கு உண்டு. தனக்கு ஏற்றவர் கிடைத்து விட்டால், அவர்களை பொக்கிஷம் போல பாதுகாத்து, ஆழமாக காதலிப்பர். 


4.மகரம்:


பிறரை புத்தகம் போல படிப்பதில் கை தேர்ந்தவர்கள், மகர ராசிக்காரர்கள். வெளியில் பார்ப்பதற்கு இவர் வெட்கப்படுபவர் போல தெரிந்தாலும், உள்ளுக்குள் இவர்களுக்குள் ஒரு ரோமியோ அல்லது ஜூலியட் ஒளிந்திருப்பர். காதல் விஷயம் மட்டுமன்றி தனது வாழ்க்கை குறித்த, தனக்கு பிடித்த எந்த விஷயமாக இருந்தாலும் சரி, அதை செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள். தன் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ, அதைத்தான் செய்வார்கள். பெரிதாக பேச தெரியாதவர்கள் போல ஆரம்பத்தில் தெரிந்தாலும், பழக பழக இவர்களை போல யாராலும் பேச முடியாது என்ற உணர்வு நமக்கு தோன்றும். இவர்களுக்கு, ஆர அமர யோசித்து காதல் வந்தாலும், மிகவும் ஆழமாகவே வரும்.


மேலும் படிக்க | துலாமில் செவ்வாய்... ருசக யோகத்தினால் ‘இந்த’ ராசிகளுக்கு ஒளிமயமான எதிர்காலம்!


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ