சனி வக்ர நிவர்த்தி பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிட சாஸ்திரப்படி 2023 நவம்பர் மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெல் நவம்பர் மாதத்தில் சனி, ராகு-கேது மற்றும் சுக்கிரன் போன்ற முக்கியமான கிரகங்கள் அனைத்து 12 ராசிகளின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளனர். கொடிய கிரகங்களான ராகு-கேது அக்டோபர் 30ஆம் தேதி பெயர்ச்சி அடைகிறார். இதற்குப் பிறகு, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியான சுக்கிரனின் பெயர்ச்சியுடன் நவம்பர் மாதம் தொடங்குகிறது. இதற்குப் பிறகு நவம்பர் 4 ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். தற்போது இந்த நேரத்தில் சனி வக்ர நிலையில் சஞ்சரித்து வருகிறார். இந்த முக்கியமான கிரகங்களின் நிலை மாற்றங்கள் அனைத்து மக்களையும் பாதிக்கும். ஆனால் நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த கிரகப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளிக்கு முன்பே இந்த 4 ராசிக்காரர்களும் தீபாவளி கொண்டாட்டம் டபுள் மடங்காகிவிடும். இவர்கள் நிறைய செல்வம் பெற்று ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள். இந்த கிரகப் பெயர்ச்சியால் நவம்பர் மாதம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நவம்பர் மாதம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதை தெரிந்துக்கொள்வோம்:


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் லாபம் அடைவார்கள். சில பெரிய மாற்றங்களையும் பெறலாம். பணம் வந்து சேரும். வேலை மாற விரும்புபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். மேஷ ராசிக்காரர்களுக்கு சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். இது தவிர, நிலுவையில் இருந்த பணமும் இந்த காலகட்டத்தில் திருப்பிப் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | கோடீஸ்வர புதையல் யோகம்.. சனியால் தீபாவளியில் உச்சம் செல்லப் போகும் ராசிகள் 


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வருமானம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள பணமும் கிடைக்கும். பொருள் இன்பங்களைச் சேமிப்பீர்கள் மற்றும் செலவழிப்பீர்கள். திருமணம் நிச்சயிக்கப்படலாம். குடும்பத்தில் சமய நிகழ்ச்சிகள் நடைபெறும்.


கன்னி: கன்னி ராசியினருக்கு நவம்பர் மாதம் சுப பலன்களைத் தரும். நீங்கள் நிலுவையில் உள்ள போனஸை பெறலாம். மேலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கையில் காதல் நிலைத்திருக்கும்.


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் பல வரங்களைத் தரப் போகிறது. உங்கள் அதிர்ஷ்டத்தின் மூடிய கதவுகள் இந்த நேரத்தில் திறக்கப் போகிறது. எதிர்பாராமல் பணம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் நல்ல சூழ்நிலை இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சனியின் உச்ச ஆட்டம் ஆரம்பம்.. இந்த ராசிகளுக்கு தீபாவளி முதல் அபார கோடீஸ்வர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ