திருமண தடைக்கு காரணம் பலவாக இருந்தாலும் சில தோஷங்கள் காரணமாக உரிய வயதில் திருமணம் நடைபெறுவது தடைபடுகிறது என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. ஜோதிடப்படி திருமண தோஷம் எனப்படும் தார தோஷத்திற்கான கிரக அமைப்பு என்பது ஜாதகத்தில் தெரிந்துவிடும். ஆனால், விதியை மதியால் வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு... அது உண்மையில் இறைவனின் சித்தம். இறை வழிபாட்டால் கிரக தோஷங்களை மட்டுப்படுத்தி, நற்பலன்களை அடைய முடியும் எனும்போது திருமண தோஷங்களுக்கும் அது பொருந்துவதாக இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜனன கால ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் கிரகம் அமைந்திருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்லப்படுகிறது.


பெண்களின் ஜாதகத்தில் மட்டுமே மாங்கல்ய தோஷம் இருப்பதாக நம்பப்படுகிறது. பெண்னின் ஜாதகத்தில் லக்கினத்துக்கு 8 ஆம் இடத்தில் அசுப கிரகங்களான சூரியன், ராகு, கேது, சனி போன்ற கிரகங்கள் அமைந்திருப்பது மாங்கல்ய தோஷம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.  


மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்தியில் விதவிதமான அலங்காரங்களில் கலக்கும் பிள்ளையார்


அதேப்போல ஒருவரின் ஜாதக கட்டத்தில் லக்னத்துக்கு 2, 7, 8 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் சூரிய தோஷமாகும். தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிசார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. 


 சூரிய தோஷ அமைப்பு கொண்ட ஜாதகங்களை, அதே போன்ற அமைப்பு கொண்ட ஜாதகருடன் சேர்ப்பதால் அந்த தோஷம் நிவர்த்தியாகிறது. திருமத்தை தடுக்கும் தோஷங்களை தவிர்ப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளன.


துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. அதேபோல, ஏழைப் பெண்ணை வீட்டிற்கு அழைத்து, அவரை எண்ணெய் ஸ்நானம் செய்யச் சொல்ல வேண்டும். அவருக்கு புதிய ஆடைகளை கொடுத்து, விருந்து கொடுத்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.


மேலும் படிக்க | Astro: தீராத கடன் தொல்லையா; சில எளிய ஜோதிட பரிகாரங்கள்


வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் திருமணத்தடை நீங்கும்.  தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிசார தோஷங்களால் ஏற்படும் திருமணத் தடையை நிவர்த்திக்க கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் அது சிறந்த பரிகாரம் ஆக இருக்கும்.


செவ்வாய் தோஷத்தால் தடைபடும் திருமணத்தை நடத்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முருகப் பெருமானை தொடர்ந்து வணங்கி வர வேண்டும்.


வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவதும், புன்னை மரத்தை வலம் வந்து வணங்கி வருவதும் திருமணத் தடைகளை நீக்கும். இறுதியான ஒன்று என்றாலும் இது நல்ல பலன் கொடுக்கும் பரிகாரம். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.  


 மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ