அனுமனுக்கு இந்த 5 பொருட்களை வைத்து அர்ச்சனை செய்தால் செல்வ மழை பொழியும்!
ஹனுமான் அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும், ஆசைகளை நிறைவேற்றி வைக்கும் கடவுளாக போற்றப்படுகிறார். ஹனுமனை வழிபாடும் போது என்ன என்ன விஷயங்கள் இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
ஹனுமான் ராமச்சந்திராவின் அர்ப்பணிப்புள்ள பக்தராகக் இராமாயணத்தில் கூறப்படுகிறது. ராமச்சந்திர பகவானை மகிழ்விக்க அனுமனை வழிபட்டாலே போதும் என்ற நம்பிக்கையும் இந்து புராணங்களில் உள்ளது. கடவுள் ஹனுமான் ருத்திரன் மற்றும் பகவான் சங்கரின் அவதாரமாக கருதப்படுகிறார். ஹனுமனை வழிபடுவதால் பலவிதமான நோய்கள், துக்கங்கள், பயங்கள் போன்றவற்றில் இருந்து விடுபடலாம். ஹனுமான் அனைத்து வகையான ஆசீர்வாதங்களையும் வழங்கும் கடவுளாக போற்றப்படுகிறார். இதன் காரணமாக பலரும் ஹனுமனை கடவுளாக வணங்கி வருகின்றனர்.
ஹனுமனை தரிசிக்கும் போது ஹனுமான் சாலிசா, சுந்தர்கண்ட் போன்றவற்றையும் பக்தர்கள் படிக்கிறார்கள். ஹனுமானுக்கு இனிப்பு லட்டு மிகவும் பிடிக்கும், எனவே பக்தர்கள் ஹனுமன் பூஜையின் போது லட்டுகளையும் இனிப்புகளையும் வழங்குகின்றனர். மேலும் அனுமனை வழிபாடும் போது அவரை மகிழ்விக்கக்கூடிய ஐந்து விஷயங்களைப் பற்றி தெரிந்து கொண்டு வழிபடுவது நல்லது. கீழே சொல்லப்பட்டு இருக்கும் இந்த விசேஷமான பொருட்களை அனுமனுக்கு சமர்பித்தால், அவர் நிச்சயமாக மகிழ்ச்சி அடைந்து உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.
வெற்றிலை
ஹனுமனை வழிபடும் போது வெற்றிலையை வழங்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஹனுமனுக்கு வெற்றிலையை சமர்பிப்பதன் மூலம் வாழ்வின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்பது இந்து மத நம்பிக்கை. ஏனெனில் ஹனுமனுக்கு வெற்றிலை மிகவும் பிடித்தமானது, எனவே அவரது வழிபாட்டில் வெற்றிலையை பயன்படுத்த வேண்டும்.
குங்குமம்
ஹனுமனை வழிபடும் போது குங்குமம் கொண்டு வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது. ஹனுமன் வழிபாட்டின் போது குங்குமம் பயன்படுத்தப்பட வேண்டும்.
ஜலேபி
ஹனுமானின் ஆசீர்வாதத்தைப் பெற, செவ்வாய்கிழமையன்று அனுமாருக்கு ஜிலேபி சமர்பித்தால் அவரது ஆசீர்வாதம் சீக்கிரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமனுக்கு உணவு வழங்குவதற்கு முன் இந்த விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் அனுமனின் ஆசீர்வாதம் நிச்சயமாக உங்கள் மீது பொழியும்.
உளுந்தம்பருப்பு லட்டு
ஹனுமானுக்கு லட்டுகள் மிகவும் பிடிக்கும், மேலும் உளுந்து மாவில் செய்யப்பட்ட லட்டுகளும் ஹனுமானுக்கு அதிகமாக படைக்கப்படுகின்றன. உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்றால் செவ்வாய்கிழமையன்று அனுமனுக்கு உளுந்து மாவினால் செய்யப்பட்ட லட்டுகளை சமர்பித்தால், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பூந்தி லட்டு
உங்கள் ஆசைகள் நிறைவேற ஹனுமானுக்கு செவ்வாய்கிழமை அன்று பூந்தி லட்டு அர்ச்சனை செய்ய வேண்டும். அனுமன் இதனால் மகிழ்ச்சியடைந்து அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுகிறார்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. இவை தொடர்பான எந்தவொரு பரிசோதனைக்கும் முன், நிபுணர் ஆலோசனை அவசியம். எங்கள் நோக்கம் வாசகர்கள்/பார்வையாளர்களுக்கு தகவல்களை வழங்குவது மட்டுமே. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உதயமான சனியால் 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி அஸ்தமனம்! எச்சரிக்கை அவசியம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ