குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, பொற்காலம் ஆரம்பம்

Guru Peyarchi Palangal: குரு பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் அளிப்பார். எனினும் சில ராசிகள் குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2024, 02:40 PM IST
  • குரு பகவான் இப்போது மேஷ ராசியில் இருக்கிறார்.
  • அவர் மே ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார்.
  • குருவின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகள் மீது பண மழை, பொற்காலம் ஆரம்பம் title=

Guru Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து ராசிகளுக்கும் ஒரு தனித்துவமான முக்கியத்துவம் உள்ளது. கிரகங்கள் ஒரு குறிப்பிட்டு காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்கிர பெயர்ச்சி, வக்கிர நிவர்த்தி என என பல வித மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை மாற்றினாலும் சனி மற்றும் குருவின் ராசி மாற்றங்கள் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. சனி பெயர்ச்சிக்கும் குரு பெயர்ச்சிக்கும் ஜோதிடத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 
குரு பகவான் ஒரு சுபமான கிராமாக பார்க்கப்படுகிறார். குழந்தைகள், செல்வம், திருமண வாழ்க்கை, கல்வி, வேலை, பணவரவு, செல்வம் செழிப்பு, ஆன்மீகம் ஆகியவற்றின் காரணி கிரகமாக அவர் இருக்கிறார். குரு பார்வை ஒருவர் மீது இருந்தால் அவர் தன் வாழ்வில் பல வெற்றிகளை காண்கிறார். அவரது முன்னேற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. 

குருபகவான் மே ஒன்றாம் தேதி மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இந்த ஆண்டு நடக்கவிருக்கும் இந்த குரு பெயர்ச்சி மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். குரு பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளையும் அளிப்பார். எனினும் சில ராசிகள் குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நற்பலன்களை அடையவுள்ளன. இவர்களுக்கு இது வாழ்வில் இரு ஒரு பொற்காலமாக இருக்கும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த அனைத்து பணிகளும் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம் (Aries)

குரு பகவான் இப்போது மேஷ ராசியில் இருக்கிறார். அவர் மே ஒன்றாம் தேதி ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். குருவின் இந்த பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். இவர்களுக்கு அதிகப்படியான நிதி நன்மைகள் நடக்கும். வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

மேலும் படிக்க | உதயமான சனியால் 4 ராசிகளுக்கு மகிழ்ச்சி அஸ்தமனம்! எச்சரிக்கை அவசியம்!

ரிஷபம் (Taurus)

குரு பகவான் ரிஷப ராசியில் தான் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஆகையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் ஏற்படும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். பல புதிய பொறுப்புகளை பெறுவீர்கள். இவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணி புரிபவர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும்.

கடகம் (Cancer)

கடக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலவித நன்மைகளை அளிக்க உள்ளது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்  அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். பங்குச்சந்தை லாட்டரி ஆகியவற்றில் லாபம் உண்டாகும். முதலீடு செய்ய நினைத்திருப்பவர்கள் இப்பொழுது முதலீட்டை செய்யலாம். இந்த முதலீடுகளால் எதிர்காலத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளாலும் இப்பொழுது பணம் வரவு இருக்கும்.

மேலும் படிக்க | கிரக தோஷங்களையும் போக்கும் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு! வல்வினைகளை போக்கும் சிவமந்திரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News