Today Rasipalan March 26, 2024 In Tamil : அனைத்து ராசிகளுக்கும் அவரவர்களின் கிரகப்பலன்களின் அடிப்படையில் அன்றைய பொழுது அமையும். அந்த வகையில், இன்று எந்த ராசியை சேர்ந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் என்பதையும், யார் யாருக்கு நல்ல நேரம் இருக்கிறது என்பதையும், இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்:


பண ரீதியாக உங்களுக்கு இன்று ஜாக்பாட்தான். கேட்டது கிடைத்து விடும், நினைப்பது நடந்துவிடும். உடல் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பயில்பவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குடும்பம் மற்றும் சுற்றத்தாரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. 


ரிஷபம்:


பயணத்தின் மீது ஈடுபாடு உள்ளவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேறும். ஏதேனும் சொத்து சேர்க்கும் வாய்ப்புள்ளது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முயல்வீர்கள். தொழில் முதலீட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். அலுவலகத்தில், வேலை செய்யும் இடத்தில் நற்பெயர் கிடைக்கும். 


மிதுனம்:


எதிலாவது முதலீடு செய்யும் முன்பு கவனமாக இருக்கவும். நீங்கள் நிதித்துறையில் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு அணுகூலமாக அமையும். வம்சாவழி சொத்துகள் குறித்த செய்திகள் வர வாய்ப்புண்டு. 


கடகம்:


வேலை சார்ந்த விஷயத்தில் சொன்னதை செய்து காட்டுவீர்கள். நிதி ரீதியாக உங்களது மதிப்பு உயரலாம். சொத்துகளை விற்க நினைப்பவர்களுக்கு தகுந்த ஆட்கள் இன்று வந்து சேருவர். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் நீங்கள் எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருப்பர்.


சிம்மம்:


வேலை தேடிக்கொண்டுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி வந்து சேரலாம். உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதை இன்று செய்து முடிப்பீர்கள். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகை புரிய வாய்ப்புள்ளது. வெளியூர் பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. 


கன்னி ராசி:


வேலை செய்யும் இடத்தில் அனைவருடனும் நல்ல முறையில் பழகுவீர்கள். பலருக்கு இன்று நீங்கள் உதவும் வாய்ப்புள்ளது.  நமபகமான நிதி துறாஇ சார்ந்த விஷயத்தில் முதலீடு செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது நலம். இன்று, தொழில் ரீதியாக அணுகூலமான செய்தி வந்து சேரலாம். 


துலாம்:


நிதானத்துடன் செயல்படுவீர்கள். உங்களது படைப்பாற்றல் திறன்கள் வெளிபடுத்த நல்ல நாள் இது. தொழில் தொடங்கியிருப்பவர்களுக்கு இன்று, லாபம் இரட்டிப்பாகலாம். வாகனம் ஓட்டுகையில் கவனம் முக்கியம். 


மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் அதிர்ஷ்டகார ராசிகள்! குரு, சனி யோகத்தால் அபூர்வ பலன்கள் காத்திருக்கிறது


விருச்சிகம்:


பெரியவர்கள் கூறும் அறிவுரைகளை கேட்டு நடப்பீர்கள். புது நகரத்தில் குடிபெயர இருப்பவர்களுக்கு ஏற்ற வீடு கிடைக்கலாம். திருமண வரன் தேடுபவர்களை தேடி நல்ல செய்தி வரும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். இதற்கு முன்னர் வாழ்க்கையில் செய்த தவறுகளை திருத்திக்கொள்வீர்கள். 


தனுசு:


உடல் நலனில் இன்று மிகுந்த அக்கறை செலுத்துவீர்கள். சிலர், வேலையில் இருந்து விடுப்பு எடுக்க வாய்ப்புள்ளது. நிதி ரீதியாக உங்களுக்கு லாபகரமான விஷயங்கள் நடைபெறும். அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். 


மகரம்:


உங்கள் உழைப்பிற்கான ஊதியம் வந்து சேரும் நாள் இது. வீட்டை சீரமைக்க ஏற்பாடு செய்ய வாய்ப்புண்டு. சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம். உங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்கும் சில வாய்ப்புகள் வந்து சேரும். சொத்து சேர்க்க வாய்ப்புள்ளது. உங்களின் நலன் விரும்பி ஒருவர் கூறும் அறிவுரை உங்களுக்கு கை கொடுக்கும். 


கும்பம்:


சிலர், இன்று பண ரீதியான விஷயங்களை கையாள்வர். உடல் நலனை மேம்படுத்த இன்று சிலர் அக்கறை கொள்வீர்கள். சிலர், சொத்துகளை விற்க முயற்சி செய்வீர்கள். முதலீடு செய்திருந்த பணம், இரட்டிப்பாக உங்கள் கைகளை வந்தடையும். 


மீனம்:


உங்களுக்கு பணம் தராமல் இழுபறி செய்தவர்கள் இன்று அந்த பணத்தை உங்களிடம் வந்து கொடுக்கலாம். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகள் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லை என்றாலும், நீங்கள் இறுதியில் அவர்களை சம்மதிக்க வைத்து விடுவீர்கள். படிப்பு ரீதியாக சிலருக்கு கவனம் அதிகரிக்கும். இரவில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கவும்.


மேலும் படிக்க | இனிக்க இனிக்க பேசி காரியத்தை சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட 5 ராசிகள்!


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ