சுக்கிரன் புதன் சஞ்சாரம்: வேத ஜோதிட சாஸ்திரத்தின்படி, பல முக்கியமான கிரகங்கள் நவம்பர் மாதத்தில் சஞ்சரிக்கப் போகின்றன. இதில் 3 நாட்களில் 2 கிரகப் பெயர்ச்சிகள் நடக்கின்றன. நவம்பர் இரண்டாம் வாரத்தில், 11ம் தேதி, சுக்கிரன் கிரகம் ராசி மாறுகிறது. அதே நேரத்தில், நவம்பர் 13 ஆம் தேதி, புதன் கிரகம் மாறுகிறது. இந்த வகையில் நவம்பர் 11-ம் தேதி விருச்சிக ராசியில் சுக்கிரனும், நவம்பர் 13-ம் தேதி புதன் விருச்சிக ராசியிலும் சஞ்சரிக்க உள்ளனர். 4 ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் புதன் சஞ்சாரம் மிகவும் சுப பலன் தரும். 2022 நவம்பரில் எந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

3 நாட்களில் ராசியை மாற்றும் 2 கிரகங்களினால் 4 ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான காலம் கைகூட இருக்கிறது. இந்த ராசிக்காரர்களின் தொழிலும் அருமையாக இருக்கும். கிரகப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை நவம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். 3 நாட்கள் இடைவெள்யில் ராசியை மாற்றும் 2 கிரகங்களினால்! 4 ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்


மேலும் படிக்க | சந்திர கிரகணம் 2022: ‘சில’ ராசிகளுக்கு பண இழப்பு... ‘சில’ ராசிகளுக்கு பண வரவு! 


நவம்பர் 2022 சுக்கிரன் புதன் மாற்றத்தால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் ராசிகள்


ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரன், புதன் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். திருமணம் செய்ய விரும்புவோருக்கு இதுவே சிறந்த நேரம். இந்த நேரம் தொழில் ரீதியாகவும் சிறப்பாக இருக்கும். முன்னேற்றம் உண்டாகும், பண ஆதாயம் உண்டாகும்.


சிம்மம்: புதன், சுக்கிரனின் ராசி மாற்றங்கள், சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும் வளத்தையும் தரும். புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. நிலம் மூலம் லாபம் உண்டாகும். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். பணம் கிடைக்கும்.


மேலும் படிக்க | Guru Margi 2022: நவம்பரில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! குரு பதவி உயர்வு தருவார்


மகரம்: நவம்பரில் நடக்கும் சுக்கிரன் சஞ்சாரம் மற்றும் புதன் சஞ்சாரம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும். வியாபாரத்திலும் லாபம் கிடைக்கும். மரியாதை அதிகரிக்கும். எந்த பழைய ஆசையும் நிறைவேறும். பணியிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.


கும்பம்: சுக்கிரன் மற்றும் புதன் ராசியில் ஏற்படும் மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய பலன்களைத் தரும். புதிய வேலை கிடைக்கலாம். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு பெறலாம். எதிர்காலத்தை சீர்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கும் என்று சொல்லலாம். நீங்கள் ஒரு புதிய வீடு-கார் அல்லது ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கலாம். வாழ்வில் வசதிகள் பெருகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | செவ்வாயின் வக்ர கதியில் இருந்து முக்தி பெற பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ