பிப்ரவரி 12ஆம் தேதியான இன்று, சுக்கிரன் சனியின் சொந்த ராசியான மகர ராசிக்கு இடம் பெயர்ந்தார். மகர ராசியில் உள்ள சுக்கிரன் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு உதவுவார் என்றாலும், இந்தப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தடைக்கல்லை பொடும். பொறுப்பு கடமை, அச்சம் என இந்த ராசிக்காரர்கள் மன அழுத்தத்தில் இருக்க வேண்டியிருக்கும். காதல் வாழ்க்கையும் கசக்கும். இது அனைத்து ராசிகளுக்கான பலன் அல்ல. இன்றைய சுக்கிரப் பெயர்ச்சியால் பாதிக்கப்படும் சில ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகர ராசியில் சுக்கிரன் சஞ்சாரம்


மகரத்தில் சுக்கிரனும் செவ்வாயும் இணைவது ஜோதிட ரீதியாக குறிப்பிடத்தக்க நிகழ்வாக கவனிக்கப்படுகிறது. இந்த இரண்டு கிரகங்களும் இணைந்தால், உறவு, படைப்பாற்றல் மற்றும் தனிப்பட்ட செயல்பாடுகளைப் பாதிக்கும். இந்த நிலையில், மிகவும் மோசமாக பாதிக்கப்படும் சில ராசிகள் எவையெவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.


மேஷத்திற்கு சுக்கிரப் பெயர்ச்சி பலன்கள்


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி, வாதங்களையும் விவாதங்களையும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்லிணக்கம் இருப்பது அவசியம் என்பதால், கொஞ்சம் வாய்ச் சவடாலை கட்டுப்படுத்தவது நல்லது.  


மேலும் படிக்க | கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது


ரிஷபம்


சுக்கிரன் சஞ்சாரம், ரிஷப ராசியினருக்கு ஆன்மீகத்தில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தும். அங்கீகாரம் மற்றும் வெற்றிக்கு வழிவகுக்கும் பெயர்ச்சியாக இருந்தாலும், செவ்வாயுடன் ஒரே வீட்டில் இருக்கும் காலத்தில், பல எதிர்பாராத பிரச்சனைகளை சுக்கிரன் தருவார். அது உங்கள் பெயர் மற்றும் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம்.  


மிதுனம்
சுக்கிரன் பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்கள் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. செலவினங்களை திறம்பட நிர்வகிப்பது அவசியம் ஆகும். மன அழுத்தம் அதிகரிக்கும். தியானம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது மன நிம்மதியைக் கொடுக்கும்.


கடகத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி


கடகத்திற்கு சுக்கிரன் பெயர்ச்சி சவால்களை கொண்டு வரலாம், கூட்டுத் தொழில் செய்யும் நபர்களுக்கு மனம் ஒத்துப் போகாமல் போகலாம். கடக ராசிக்காரர்கள் தங்கள் நிதி தொடர்பான சரியான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். முழங்கால்கள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம்.


சிம்ம ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி 


மகர ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சியால் பொறுப்புகள் அதிகரிக்கும். இடமாற்றம் ஏற்படலாம். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும். மனதில் சுமைகளை ஏற்றிக் கொள்ள வேண்டாம். வாழ்க்கையில் இதுவும் கடந்து போகும் என்ற மனநிலை அவசியம் என்பதை உணர்த்தும் சுக்கிரன் பெயர்ச்சியாக இது இருக்கும்.  


தனுசு ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி 


தொழில் ரீதியாக சிலபல பிரச்சனைகள் இருந்தாலும், தற்போதைய காலம் வேலை மாற்றத்திற்கு ஏற்றதாக இல்லை. தற்போதைய வேலையில் நிறைய சவால்கள் மற்றும் அழுத்தம் இருக்கலாம், இருந்தாலும் தற்போது வேலை மாற்றத்தை தவிர்ப்பது நல்லது.  


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி இன்று: இந்த ராசிகளுக்கு சுக்கிர தசை, குபேர யோகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ