கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

Sun Saturn Conjunction 2024: பிப்ரவரி 14 முதல் கும்ப ராசியில் சூரியன் மற்றும் சனியின் சேர்க்கை ஏற்படும். இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவதோடு, வியாபாரத்தில் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறவுள்ளார்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 10, 2024, 09:03 PM IST
  • எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
  • சனி சூரியன் சேர்க்கை பலன்கள் 2024.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள்.
கும்பத்தில் நிகழும் சனி-சூரிய சேர்க்கை.. இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது

சனி சூரியன் சேர்க்கை பலன்கள் 2024: வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி சூரியன் கும்ப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையல் பிப்ரவரி 14 ஆம் தேதி சூரியன் கும்ப ராசியில் நுழைவுள்ளார். இதனால் கும்ப ராசியின் சனி சூரிய சேர்க்கை 30 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. சூரியன் மற்றும் சனியின் சேர்க்கையானது ஜோதிடத்தில் சுபமாக கருதப்படுவதில்லை. இந்த அசுப யோகம் நாடு மற்றும் உலகத்தில் பல ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்தும். இவ்விரண்டு கிரகங்களின் சேர்க்கை எந்த ராசிகளில் நிகழ்ந்தாலும், அதன் தாக்கம் சற்று மோசமானதாகவே இருக்கும். மேலும் இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும். இந்த கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தரும். வியாபாரத்தில் நல்ல வெற்றியையும் லாபத்தை பெறுவார்கள். எனவே இப்போது எந்தெந்த ராசிக்காரர்கள் பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

மிதுனம் (Gemini Zodiac Sign): மிதுன ராசியின் 9வது வீட்டில் இந்த அபூர்வ சேர்க்கை நிகழும். எனவே மிதுன ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். தொழில் ரீதியாக, பயணங்களை மேற்கொள்வீர்கள். வங்கி இருப்பு அதிரடியாக அதிகரிக்கும். நிதி நிலை மேம்படும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

மேலும் படிக்க | Sun Transit: கும்பத்தில் சூரியன்: இந்த ராசிகள் மீது பண மழை... செல்வச்செழிப்பில் திளைப்பார்கள் 

துலாம் (Libra Zodiac Sign): துலாம் ராசியின் 5வது வீட்டில் இந்த அபூர்வ சேர்க்கையானது நிகழப் போகிறது. இதனால் துலாம் ராசிக்காரர்கள் நல்ல செய்திகளைப் பெறலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி ஆடைவீர்கள். நிலுவையில் இருக்கும் அலுவலக வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைவதுடன், சிக்கிய பணம் தானாக உங்களிடம் வந்து சேரும். திட்டமிட்ட வேலைகளில் அனைத்தும் வெற்றி பெரும். தன்னம்பிக்கை அதிகளவில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி அலை பொங்கும். அமைதி நிலைத்திருக்கும். காதல் வாழ்க்கை சிறப்பாகவும் அதிக காதலுடனும் நிரம்பி இருக்கும். 

கும்பம் (Aquarius Zodiac Sign): கும்ப ராசியின் முதலாவது வெட்டில் சனி மற்றும் சூரியனின் சேர்க்கை ஏற்படப் போகிறது.  இதனால் கும்ப ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். முக்கியமாக சமூகத்தில் உங்களின் மதியாதைவும், கௌரவமும் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | shukra gochar 2024: மார்ச் மாதம் சுக்கிரன் உச்சம்.. இந்த 5 ராசிகளுக்கு ராஜ கோடீஸ்வர வாழ்க்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ
 

About the Author

Vijaya Lakshmi

விஜயலட்சுமி, ஜீ தமிழ் நியூஸ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2016ஆம் ஆண்டு ஜீ தமிழ் நியூஸில் பணியைத் தொடங்கி உள்ளேன். தற்போது சினிமா, பொருளாதாரம், வாழ்க்கை முறை, ஜோதிடம் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். பொதுமக்களின் பணம் மற்றும் பட்ஜெட் சார்ந்த விஷயங்களை எழுதுவதில் ஆர்வம் அதிகம். சினிமா, சேமிப்பு, முதலீடு, தமிழ அரசின் முக்கிய அறிவிப்புகள் போன்ற செய்திகளை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.

...Read More

Trending News