Sun Transit: ரிஷப ராசிக்கு வரும் சூரியன்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இந்த 5 ராசிகள்!
Sun Transit 2023: வரும் மே 15ஆம் தேதி, சூரிய பகவான் ரிஷப ராசிக்கு சஞ்சரிக்க இருப்பதால், 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறப்போகிறார்கள். அந்த ராசிகள் குறித்து இதில் காண்போம்.
Sun Transit 2023: இந்த பிரபஞ்சத்தின் தந்தையாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எல்லா உயிர்களும் அவை தரும் ஆற்றலால் வலிமை பெற்று, அவற்றின் வாழ்க்கையை தொடர்கிறது. சூரிய பகவான் இந்த இயற்கையை வளர்ப்பவர். வளர்ப்பவர் மட்டுமல்ல, அவர் அனைத்து உயிரினங்களுக்கும் மிகவும் நெருக்கமானவர்.
சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்து சுமார் ஒரு வருடத்தில் தங்கள் சுழற்சியை முடிக்கிறார்கள். இப்போது வரும் மே 15ஆம் தேதி, அவர் தனது உற்ற கிரகமான செவ்வாயின் ராசியில் இருந்து விலகி, சுக்கிரனுக்கு சொந்தமான ரிஷப ராசிக்கு மாற உள்ளார். அவரது சஞ்சாரத்தால், 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டசாலிகளாக மாறப் போகிறார்கள் மற்றும் அவர்களின் அதிர்ஷ்டம் ஒரு மாதத்திற்கு சூரியனைப் போல பிரகாசிக்கும். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று இதில் காணலாம்.
கடகம்
இந்த ராசிக்காரர்கள் பெரிய அதிகாரிகள் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பு கொள்வார்கள். அவருடன் தொடர்பு கொள்வதால் பல வேலைகள் தானாக நடக்க ஆரம்பிக்கும். நீங்கள் பணிபுரியும் எந்தத் துறையிலும் வெற்றிக்கான வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்களுக்கு பல நல்ல தகவல்களை சூரிய சஞ்சாரம் கொண்டு வரப் போகிறது. குழந்தை பல நல்ல பலன்களைப் பெறுவார். வாகன சுகம் பெறலாம்.
மேலும் படிக்க | சனி சுக்கிரன் சேர்க்கை: நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி
சிம்மம்
சூரிய சஞ்சாரத்தால், அரசு வேலை தேடும் சிம்ம ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். நல்ல அரசுப் பதவிக்கு நீங்கள் தேர்ந்தெடுக்கப்படலாம். தனியார் துறையில் பணிபுரியும் இந்த ராசிக்காரர்களுக்கு, பெரிய பதவியைப் பெற்று முன்னேற வாய்ப்புள்ளது. சமூகத்தில் உங்கள் புகழும், மதிப்பும் உயரும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக இருக்கும், இதன் காரணமாக மாறிவரும் பருவநிலையிலும் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
கன்னி
சூரிய பகவானின் பெயர்ச்சி காரணமாக, ஆன்மீகத்தின் மீது உங்கள் நாட்டம் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுவீர்கள். இதனால் உங்களுக்கு மரியாதை கிடைக்கும். பல இடங்களில் தொண்டு செய்வீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் வீட்டில் எந்தவொரு பூஜையையும் வைக்கலாம். சூரியனின் சஞ்சாரத்தின் போது புனித யாத்திரை தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெறலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்பும் கிடைக்கலாம்.
தனுசு
சூரிய பெயர்ச்சியால் தனுசு ராசிக்கு ஆறாவது வீட்டில் நுழைகிறார். அவர்கள் ஆறாம் வீட்டில் சஞ்சரித்தால், உங்கள் எதிரிகள் எவ்வளவு வலிமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் தோல்வியை தழுவி, மண்ணைக் கவ்வும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக வரலாம். உங்களுக்கு நீண்ட நாளாக வராமல் சிக்கலில் இருந்த பணத்தை இந்த காலகட்டத்தில் மீட்டெடுக்க முடியும். வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும்.
மகரம்
சூரியனின் ராசி மாற்றத்தால், மகர ராசிக்காரர்களின் காதல் உறவுகள் முன்னேற்றமடையும். தெரியாத விஷயங்களின் ரகசியத்தை அறிய உங்கள் மனம் அமைதியற்று இருக்கும். ஆராய்ச்சி மற்றும் பிற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பீர்கள். வேலை செய்பவர்களுக்கு வேலை மாற்றம் சாத்தியமாகும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். எந்தத் துறையிலும் செய்யப்படும் முதலீடு உங்களுக்குப் பயனளிக்கும். சமூகத்தின் முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சித்ரா பவுர்ணமி: கிரிவலம் செல்ல உகந்த நேரம் - சிறப்புகள் இதோ..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ