புதன் வக்ர பெயர்ச்சி: இந்த 5 ராசிகளுக்கு அபரிமிதமான செல்வ வளம் உண்டாகும்!
Mercury Retrograde 2023: புதன் வக்ர நிலையினால் ஏற்படும் சுப பலன்கள் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிலை சுபமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
Mercury Retrograde 2023: புதன் கிரகம் பெயர்ச்சியான பிறகு, இப்போது புதன் வக்ர நிலையில் பெயர்ச்சியாகிறது. இப்போது புதனும் செவ்வாயும் மேஷ ராசியில் பின்வாங்கப்போகிறார்கள். புதனின் இந்த வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் பொருளாதார நிலை, தொழில் ஆகியவற்றில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரும் ஏப். 21 அன்று புதன், மேஷத்தில் இருந்து பின்வாங்கப் போகிறது. புதன் வேகமாக நகர்ந்து தனது ராசியை அடிக்கடி மாற்றுவது வழக்கம். ஏப்.21 அன்று மதியம் 1.25 மணிக்கு புதனின் வக்ர பெயர்ச்சி இருக்கும். அதாவது புதன் வக்ரமாகச் செல்லும். புதன் வக்ர நிலையினால் ஏற்படும் சுப பலன்கள் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு புதனின் வக்ர நிலை சுபமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
மேஷம்: புதன் மேஷ ராசியில் மட்டுமே வக்ர நிலையை அடைகிறது. தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் லாபம் அடைவார்கள். வெளிநாட்டு பயணம் செல்லலாம். அபரிமிதமான செல்வ வளம் உண்டாகும். செயல்களில் வெற்றி உண்டாகும்.
மேலும் படிக்க | இன்னும் சில மணி நேரம்... குரு-சந்திரன் சேர்க்கையால், 4 ராசிகளின் கஜானா நிரம்பும்
மிதுனம்: புதன் வக்ர நிலையில் இருப்பதால், மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் இனிமையான மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு பெறலாம். வருமானம் கூடும். புதிய பொறுப்பு கிடைக்கும். தொலைதூரப் பயணம் செல்லலாம். நீங்கள் நேர்மறையான முடிவுகளைப் பெறுவீர்கள்.
சிம்மம்: புதனின் வக்ர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். அதிர்ஷ்டம் உங்களுடன் இருக்கும். வெற்றிக்கான புதிய பாதைகள் திறக்கும்.
கும்பம்: புதன் வக்ர நிலையில் இருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு வேலை அல்லது வியாபாரத்தில் பெரிய பலன்கள் கிடைக்கும். இந்த நேரம் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். போட்டியாளர்களை விட்டு விலகுவீர்கள். வெற்றி உங்களை வந்துசேரும்.
மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு புதனின் பிற்போக்கு நல்ல பலன்களைத் தரும். எழுத்து தொடர்பான வேலைகளில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். வியாபாரம் உச்சத்தை எட்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உதவியால் வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவீர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ