ஏப்ரல் 20, 2023 அன்று சூரிய கிரகணம் ஏற்படவிருக்கிறது. சூரிய கிரகணம் ஏற்படும் நாளில் பல கிரகங்கள் விசித்திரமான தற்செயல் நிகழ்வுகளை உருவாக்குகின்றன. சூரிய கிரகணம் நிகழும் போது, ​​அந்த நேரத்தில் சூரியன் ராகு மற்றும் புதன், மேஷ ராசியில் இருக்கும். மறுபுறம், மறுபுறம் புதனின் ராசியில் செவ்வாய் பரிவர்த்தனையாகி இருப்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில், புதன் கிரகம் மிதுன ராசியின் அதிபதி என்றால், செவ்வாய் மேஷத்தின் அதிபதி. புதன் மேஷத்திலும், செவ்வாய் மிதுனத்திலும் இருப்பதால் இரு கிரகங்களின் ராசிகளும் பரிவர்த்தனை ஆகியது. ராசி மாற்றம் உருவாகிறது. எனவே ராசி மாற்றத்தால் 5 ராசிக்காரர்களுக்கு சூரிய கிரகணம் கெட்ட பலனை ஏற்படுத்தும்.


சூரிய கிரகணத்தால் கஷ்டப்படப்போகும் ராசிகள்


மேஷம் 
மேஷ ராசிக்காரர்களுக்கு பரிவர்த்தனை யோகத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும். ஆரோக்கியக் குறைவு ஏற்படும். தவறுகளை மன்னிக்கும் மனம் இல்லாததால் சிக்கல்கள் ஏற்படும். தொழில் அல்லது வேலை சம்பந்தமாக எந்த முடிவையும் எடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். செய்யும் தொழில் அல்லது வேலையை மாற்ற விரும்பினால், அதற்கான நேரம் இதுவல்ல, இருக்கும் வேலையை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். வியாழன் அன்று கோதுமை தானம் செய்யுங்கள்.


மேலும் படிக்க | காதலில் சஞ்சரிப்பவரா? அன்பால் வசீகரிக்கும் வசீகராவாக மாற்றும் சுக்கிரன்


ரிஷபம்


ரிஷப  ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தில் ராசி மாற்றத்தால் ஏற்ற இறக்கங்களை சந்திக்க வேண்டி வரும். திடீர் செலவுகள் அதிகரிக்கும், வீண் செலவுகள் அதிகம் ஏற்படும். இந்த காலகட்டத்தில், உங்களிடம் கடன் கேட்பவர்களை சமாளிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஞாயிற்றுக்கிழமை ஏழைகளுக்கு உணவளிக்கவும்.
 
கன்னி ராசி


சூரிய கிரகணத்தின்போது ஏற்படும் பரிவர்த்தனை தோஷத்தினால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். பொருளாதார நிலையும் நன்றாக இருக்காது. ஏற்கனவே இருந்து வந்த உடல்நலக் கோளாறு உங்களை மீண்டும் தொந்தரவு செய்யலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் வரலாம்.


வியாபாரத்தில் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், லாப நஷ்டம் பற்றி யோசியுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். செவ்வாய்கிழமை அன்று அனுமாரை வணங்கவும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு சாதகமான நேரம், ராஜபோக வாழ்க்கை!!


துலாம்


துலாம் ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தன்று ஏற்படும் பரிவர்த்தனை மாற்றத்தால் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். உடல்நிலை காரணமாக கவலைகள் ஏற்படும். பணத்தட்டுப்பாட்டால் சில வேலைகளில் தடைகள் ஏற்படலாம். தந்தையுடனான உறவு சுமூகமாக இருக்காது. உத்தியோகத்தில் பணம் சம்பந்தமான பிரச்சனைகளால் அவதி ஏற்பப்டலாம்.


குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். புதன்கிழமைகளில் பிறருக்கு உணவு தானம் செய்யுங்கள்.


மகரம்


பரிவர்த்தனை யோகத்தால் மகர ராசிக்காரர்களின் தொழில், வியாபாரத்தில் பிரச்சனைகள் ஏற்படும். அதிகாரிகளால் சிரமங்கள் ஏற்படும். உறவுகள் கெட்டுப் போகலாம். அலுவலகப் பணிகள் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாராக்கடன் அதிகரிக்கும். செவ்வாய்கிழமைகளில் விஷ்ணு துர்க்கையை வழிபடவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சொந்த வீடு கனவு நிறைவேற... வரம் தரும் வாராஹி அம்மனை வழிபடும் முறை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ