சூரிய கிரகணம் 2022 பற்றி இந்த விஷயங்களாம் உங்களுக்கு தெரியுமா?

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, உஜ்ஜைன், வாரணாசி, பெங்களூரு மற்றும் மதுரா போன்ற இந்திய நகரங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.    

Written by - RK Spark | Last Updated : Oct 25, 2022, 04:10 PM IST
  • சூர்ய கிரகணம் இன்று ஏற்படுகிறது.
  • இந்த கடைசி சூரிய கிரகணம் மாலை 4:29 முதல் 5:43 வரை நீடிக்கும்.
  • டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.
சூரிய கிரகணம் 2022 பற்றி இந்த விஷயங்களாம் உங்களுக்கு தெரியுமா? title=

ஒரு அமாவாசை நாளில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் வரும்போதும், அதாவது இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.  இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் தீபாவளி பண்டிகைக்கு மறுநாளான இன்றைய தினம் (அக்டோபர் 25) நிகழ்கிறது, இது ஒரு பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.  இந்த கடைசி சூரிய கிரகணம் மாலை 4:29 முதல் 5:43 வரை கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.  டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, உஜ்ஜைன், வாரணாசி, பெங்களூரு மற்றும் மதுரா போன்ற இந்திய நகரங்களில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.  

மேலும் படிக்க | கூகுளில் தேடக்கூடாத ‘சில’ விஷயங்கள்... மாட்டினால் கம்பி எண்ண வேண்டியது தான்!

இந்த சூரிய கிரகணமானது டெல்லியில் 1 மணி நேரம் 13 நிமிடங்களும், மும்பையில் 1 மணி நேரம் 19 நிமிடங்களும், சென்னையில் 31 நிமிடங்களும், கொல்கத்தாவில் 12 நிமிடங்களும் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  மிகப் பெரிய கிரகணத்தின் போது சந்திரனால் சூரியனின் பரப்பளவு 44 சதவிகிதம் டெல்லியிலும், 24 சதவிகிதம் மும்பையிலும் இருக்கும்.  இது தவிர, மத்திய கிழக்கு, மேற்கு ஆசியா, வட அட்லாண்டிக் பெருங்கடல், ஆப்பிரிக்காவின் வடகிழக்கு பகுதிகள், வட இந்தியப் பெருங்கடல் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்கிய பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணம் நன்கு தெரியும்.  அதேசமயம் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், ஐஸ்வால், தமேலாங், திப்ருகார், சில்சார், இம்பால், சிப்சாகர், கோஹிமா மற்றும் இட்டாநகர் உள்ளிட்ட இந்திய நகரங்களில் சூரிய கிரகணத்தை பார்க்கமுடியாது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் இதுவரை மூன்று கிரகணங்கள் ஏற்பட்டுள்ளது, அவற்றில் இரண்டு சூரிய கிரகணங்கள் மற்றும் ஒன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது.  இதுவரை இந்தியாவில் ஏப்ரல் 30-ம் தேதி பகுதி சூரிய கிரகணம், மே 15-16ல் முழு சந்திர கிரகணம் மற்றும் அக்டோபர் 25-ம் தேதி பகுதி சூரிய கிரகணம் ஏற்ப்பட்டுள்ளது, இதையடுத்து மற்றொரு முழு சந்திர கிரகணம் நவம்பர் மாதம் நிகழ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இனிமேல் 2027ம் ஆண்டு ஆகஸ்ட்-2ம் தேதி அடுத்த சூரிய கிரகணம் ஏற்படும், அடுத்து 2031ம் ஆண்டில் மே மாதம் 21ம் தேதி நிகழும், இது இந்தியாவில் தெரியும், அடுத்ததாக 2034ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி சூரிய கிரகணம் நிகழும்.  சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, இது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அலுமினியம் செய்யப்பட்ட மயிலார், கருப்பு பாலிமர், வெல்டிங் கண்ணாடி அல்லது தொலைநோக்கி போன்றவற்றை பயன்படுத்தி இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம்.

மேலும் படிக்க | சொந்த வீடு கனவு நிறைவேற... வரம் தரும் வாராஹி அம்மனை வழிபடும் முறை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News