Budh Gochar 2023: பிப்ரவரி 27ஆம் தேதி புதன் ராசி மாறிவிட்டது. புதன் ராசிகளை மாற்றும்போது அதன் பலன் 12 ராசிகளிலும் தெரியும். புதன் செல்வம், வணிகம், புத்திசாலித்தனம், தர்க்கம், ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. புதனின் ராசி மாற்றம் குறிப்பாக மக்களின் தொழில், பொருளாதார நிலை, பேச்சு போன்றவற்றை பாதிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் ராசியான கும்பத்தில் புதன் பெயர்ச்சி பெரிய மாற்றங்களை கொண்டு வரும். கிரகங்களின் ராஜாவான சூரியன் ஏற்கனவே கும்ப ராசியில் இருக்கிறார். சூரியன், சனியின் ராசியில் இருக்கும்போது, புதனும் செல்வதால் ஏற்படும் கூட்டு, சில ராசிக்காரர்களுக்கு கெடுபலன்களைக் கொடுக்கும்.   


இந்த ராசிக்காரர்களின் துரதிருஷ்டம் அவர்களைத் துரத்தும்


மேலும் படிக்க | மிதுன ராசியில் செவ்வாய்! பங்குனியில் பட்டையை கிளப்பப் போகும் ராசி இது தான்!


ரிஷப ராசி


ரிஷப ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சியால் பிரச்சனைகள் முளைக்கும். புதன் அசுப ஸ்தானத்தில் அமரும்போது, அங்கிருக்கும் சூரியனும் சனியும் பிரச்சனைகளை அதிகப்படுத்துவார்கள். எனவே, இந்த நேரத்தில் வருமானத்தில் சிக்கல் ஏற்படலாம், பணம் நிலுவையில் இருப்பதால், நிதிச்சிக்கல் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்க்கும்


சிம்ம ராசி


புதன் சஞ்சாரத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல்நிலையில் பின்னடைவு ஏற்படலாம். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்குமா இல்லையா என்ற ஏக்கமும் அதிகரிக்குக்ம். தடைபட்ட வேலைகளை முடிக்க காத்திருப்பு தொடரும். வீண் செலவுகளை தடுப்பதும், சேமிப்பை உயர்த்துவதும் நல்லது. 


மேலும் படிக்க | மாசி மாத பெளர்ணமியன்று புதாதித்ய ராஜயோகத்தால் ஹோலி யோகம் பெறும் 2 ராசிக்காரர்கள்


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்களுக்கு புதனின் பெயர்ச்சியால் உடல்நிலையில் கவனம் தேவைப்படும். நல்ல பலனைத் தரும். புதன் சனி மற்றும் சூரியனுடன் இருப்பதால் வரவேண்டிய பணத்தை திரும்பப் பெறலாம். ஆனால், புதிய வருமான வாய்ப்புகள் முடங்கும். நீதிமன்ற வழக்குகளில் கவனமாக இருந்தால், சிக்கலில் இருந்து விடுபடலாம்.


மீன ராசி


புதன் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்களைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்னும் எதிர்பார்ப்பாகவே இருக்கும்ம். வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும். அதே சமயம் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்காது. கவலைகள் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Traits: தன் நலனே முக்கியம் என செயல்படும் ‘சில’ ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ