வைகுண்ட ஏகாதசி 2025... சென்னை அருகே சொர்க்கவாசல் தரிசனம் செய்ய உகந்த திவ்ய தேசங்கள்
வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
வைகுண்ட ஏகாதசி 2025: பகவான் மகாவிஷ்ணுவிற்கு மிகவும் உகந்த தினம் ஏகாதசி. அதிலும் மாதங்களில் நான் மார்கழி என்று கூறிய மகாவிஷ்ணுவிற்கு மிகவும் பிடித்தமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
மாதம் தோறும் வளர்பிறை தேய்பிறை என இரண்டு ஏகாதிசிகள் வரும். அந்த வகையில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி, எல்லா ஏகாதசி தினங்களிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏதாவது இணையான விரதம் இல்லை என்று கூறுவார்கள். பகவான் விஷ்ணுவை வேண்டி வழிபடும் விரதங்களில் மிகவும் முக்கியமாக இருப்பது ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது அஸ்வமேத யாகம் செய்த பலனை கொடுக்கும் என்கிறது புராணங்கள். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று, அனைத்து பெருமாள் ஆலயங்களிலும், சொர்க்கவாசல் என்று கூறப்படும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த வாசல் வழியாகச் சென்று பகவான் விஷ்ணுவை வழிபட்டால், வாழ்வில் இம்மைகள் அணைந்தும் நீங்கி, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
ஏகாதசி தினத்தில், நள்ளிரவில் கண் விழித்து, சொர்க்கவாசல் வழியாக சென்று பெருமாளை வணங்குவதால், வைகுண்ட பதவிக்கு நிகரான செல்வம், ஞானம், புகழ், இன்பம் என அனைத்தையும் பெற்று வாழ்வார் என்பது ஐதீகம்.
நடப்பு ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி, நாளை அதாவது ஜனவரி மாதம் பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில், வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதசி திருநாளில், சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும் சில முக்கிய கோவில்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு விவரம்
108 திவ்ய தேசங்களில் ஒன்றான, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாசசி அன்று, அதிகாலை நாலரை மணிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான தரிசன கட்டணம் ரூபாய் 500. டிக்கெட்டை ஆன்லைன் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவச்சல பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு
108 வைணவ தலங்களில் 58 ஆவது ஆலயமாக இருக்கும் திருவள்ளுவர் மாவட்டம் திருநின்ற ஊரில் உள்ள ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் பக்தவத்சல பெருமாள் திருக்கோவிலில், சொர்க்கவாசல் திறப்பும் வைகுண்ட ஏகாதசி திருநாளும் வெகு விமர்சையாக நடைபெறும்.
மேலும் படிக்க | 2025 மகாகும்பமேளாவில் கலந்து கொள்ளும்... ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி... லாரன் பவல் ஜாப்ஸ்
திருவடிசூலம் ஸ்ரீவாரு வெங்கடேச பெருமாள் திருக்கோவில்
108 திவ்ய தேசங்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவடிசூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு விமர்சையாக நடைபெறும். இந்த திருக்கோவில் ஏழு மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ளது என்பதால் சிறப்பு வாய்ந்த கோவிலாக கருதப்படுகிறது.
காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவில்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 44-வது திவ்ய தேசமான காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், சொர்க்கவாசல் திறப்பு வெகு விமர்சியாக நடைபெறும். ஐந்து ஆண்டுகள் கழித்து சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால், கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
காஞ்சிபுரத்தில் உள்ள வைகுண்டராஜ பெருமாள் கோவிலில், முதல் மாடியில் உள்ள பரமபத வாசல் பைக் ஒருமுறை திறக்கப்படும். ஆனால் கோவிலில் புனரமைப்பு பணி நடைபெறுவதால் சொர்க்கவாசல் திறப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | போகி பண்டிகையில் இந்த 4 ராசிக்காரர்கள் வாழ்க்கை பொற்காலமாய் மாறப்போகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ