100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் அபூர்வயோகம்... அதிர்ஷ்டத்தை அள்ள போகும் 6 ராசிகள்
பல ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கும் அபூர்வ கிரகங்களின் சேர்க்கை மற்றும் சுப யோகம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு தந்தேரஸ் நாளில் உருவாகிறது. இதனால் பலனடையப்போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.
இன்று நாடு முழுவதும் தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது, தன்வந்திரி, மாதா லட்சுமி மற்றும் குபேரர் ஆகியோரை வழிபடுவதோடு, அட்சய திருதியை போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தன்தேராஸ் நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்குவது அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்பதும் ஐதீகம்.
2024ம் ஆண்டு தந்தேரஸ் நாளில் திரிக்ராஹி யோகம், திரிபுஷ்கர யோகம், ஷஷ மஹாபுருஷ் யோகம், லக்ஷ்மி நாராயண யோகம் உள்ளிட்ட பல சுப யோகங்கள் கூடி வந்துள்ளன. இதனால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த மங்கள நாளில், குபேரரின் சிறப்பு ஆசீர்வாதங்கள் மற்றும் அவரது ஆசியால், செல்வம் பெருகும். சில ராசிக்காரர்கள் குபேர் தேவரின் அருளை பரிப்பூரணமாக பெற்று ஆண்டு முழுவதும் எந்தக் குறையும் இல்லாமல் (Lucky Zodiacs) இருப்பார்கள். 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் அபூர்வ யோகம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் அளிக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்...
மேஷ ராசி
கிரகங்களின் அபூர்வ சேர்க்கை காரணமாக, மேஷ ராசிக்காரர்கள் ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். குபேரரின் அருளால் பணம் கஷ்டங்கள் நீங்கி உங்கள் ஆரோக்கியமும் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பதோடு, வருமானத்தில் உயர்வையும் காண்பார்கள். குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ்வார்கள்.
ரிஷப ராசி
அபூர்வ யோகங்களால், ரிஷபம் ராசிக்காரர்களின் பிரச்சனைகள் குறையத் தொடங்கும். தொழிலதிபர்கள் குபேர் தேவரின் ஆசீர்வாதத்தால் நன்கு பயனடைவார்கள். உங்கள் நிதி நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்பும் இந்த ராசி மாணவர்களின் விருப்பம் நிறைவேறுவதுடன் உங்களின் அறிவுத்திறனும் வளரும். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் வெற்றி பெறுவீர்கள். மாமியார் அல்லது மனைவியுடன் ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது தவறான புரிதல் ஏற்பட்டால், அது முடிவுக்கு வந்து உறவில் இனிமை இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவடையும்.
சிம்ம ராசி
தந்தேராஸ் தினத்தன்று ஏற்படும் சுப யோகத்தினால், சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் சாதகமான மாற்றங்களைக் காண்பார்கள் மற்றும் குபேர் தேவரின் ஆசியால், செல்வம் அதிகரிக்கும். சொத்து மற்றும் வாகனம் வாங்கும் உங்கள் விருப்பம் நிச்சயமாக நிறைவேறும். நிதி தொடர்பான அனைத்து வேலைகளும் நிறைவேறும். பணம் சம்பாதிப்பதற்கான பல வழிகளை காணலாம். தொழில் செய்பவர்கள், அதனை விரிவுபடுத்தவும் முடியும். உங்கள் மனைவியுடனான உங்கள் உறவு வலுவடையும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் நீங்கள் முழுமையாக கவனித்துக்கொள்வீர்கள்.
கன்னி ராசி
தந்தேராஸ் தினத்தன்று உருவாகும் அபூர்வ யோகங்களால் கன்னி ராசிக்காரர்களின் விருப்பங்கள் பல நிறைவேறுவதுடன் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. குபேர் தேவரின் ஆசியுடன், செல்வம் அதிகரிக்கும். மேலும் ஆண்டு முழுவதும் பல நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து முதலீடு செய்ய விரும்பினால், இந்தக் காலக்கட்டத்தில் உங்கள் வேலையை முடிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்ற வருமான ஆதாரங்களைப் பெறுவார்கள், இது தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உதவும். மேலும், நீங்கள் உங்கள் வேலையை மாற்ற விரும்பினால், உங்கள் விருப்பமும் நிறைவேறும்.
மேலும் படிக்க | மகாலட்சுமிக்கு பிடிக்காத இந்த விஷயங்களை செய்தால் தெருக்கோடி நிச்சயம்
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் நன்றாகவே அதிகரிக்கும். வேலையை எளிதாக செய்து முடிப்பதோடு வங்கி இருப்பில் நல்ல உயர்வு ஏற்படும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் பல முக்கிய நபர்களின் ஆதரவைப் பெறுவார்கள். மேலும் வியாபாரத்தில் உங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும். உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு, நிவாரணம் கிடைத்து, நிம்மதியான வாழ்க்கையை வாழுவார்கள். உங்கள் குழந்தைகளின் முன்னேற்றத்தைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் சில ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பல முக்கிய நபர்களுடனான உங்கள் அறிமுகமும் அதிகரிக்கும்.
மகர ராசி
கிரகங்களின் அபூர்வ சேர்க்கையால், மகர ராசிக்காரர்களுக்கு கவலைகள் குறைவதோடு, வாழ்வின் பல துறைகளிலும் சாதனைகள் படைத்து வெற்றி பெறுவார்கள். காதலில் இருப்பவர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். பணத்தால் உங்களின் சில வேலைகள் தடைபட்டால், குபேர் தேவரின் ஆசீர்வாதத்துடன் அவைகள் நிறைவேறி, நல்ல இடத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உங்கள் உறவுகள் வலுவாக இருக்கும், மற்றவர்களுக்கு உதவ நீங்கள் எப்போதும் தயாராக இருப்பீர்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ