Vasantha Panchami 2025 Significance: வசந்த பஞ்சமி விழா வரும் பிப். 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது. குளிர்காலம் முடிந்து வசந்த காலத்தை, அதாவது இலையுதிர் காலத்தை வரவேற்கும் இந்த வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நன்னாளில் மக்கள் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வார்கள். வசந்த பஞ்சமியை ஸ்ரீ பஞ்சமி அல்லது சரஸ்வதி பஞ்சமி என்றும் பசந்த பஞ்சமி (Basantha Panchami) என்றும் அழைப்பார்கள். கல்வி, அறிவு, இசை, கலை ஆகியவற்றின் அதிபதியாக சரஸ்வதி தேவி விளங்குவதால், இந்த நாளில் நீங்கள் சரஸ்வதி தேவியை வணங்கினால் கல்வி மற்றும் கலைகளில் நீங்கள் சிறந்த விளங்குவீர்கள் என்பது ஐதீகம். 


வசந்த பஞ்சமி 2025: உகந்த நிறம் மஞ்சள் 


வசந்த பஞ்சமி அன்று (Vasantha Panchami 2025)  மஞ்சள் நிறம் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது. அதாவது, சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் ஆடையை சாத்துவார்கள். சாமந்தி பூ போன்ற மஞ்சள் நிறத்திலான பூக்கள் கொண்டு மாலை போட்டு பூஜிப்பார்கள். மேலும் மக்களும் கூட மஞ்சள் நிறத்திலான ஆடைகளை அணிந்துகொள்வார்கள். மஞ்சள் உலோகம் என்றழைக்கப்படும் தங்கத்தையும் அன்றைய தினத்தில் அணிந்துகொள்வார்கள்.


மேலும் படிக்க | வசந்த பஞ்சமிக்கு முன் போக்கை மாற்றும் சனி..! ராஜயோகம் பெறப்போகும் ராசிகள்..!


வசந்த பஞ்சமி அன்று பலரும் தங்களின் குழந்தைகளை ஆரம்ப பள்ளிகளில் கூட சேர்ப்பார்கள். அதாவது, குழந்தைகள் அன்றைய தினம் முதன்முதலாக கல்வி கற்க தொடங்குவார்கள். இந்த நல்ல நாளில் குழந்தைகள் கல்வி கற்க தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருளால் அவர்கள் கல்வியில் சிறந்த விளங்குவார்கள் என நம்பப்படுகிறது.


வசந்த பஞ்சமி 2025: பூஜை செய்ய நல்ல நேரம் எப்போது?


இந்தாண்டு வரும் பிப். 2ஆம் தேதி வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 7:09 மணிமுதல் மதியம் 12:35 மணிவரை சரஸ்வதி தேவியை பூஜிக்க (Saraswati Puja) உகந்த நேரம் ஆகும். அன்று நல்ல நேரம் 5 மணிநேரம் 26 நிமிடங்கள் நீடிக்கும். அதிலும் மதியம் 12:35 மணியில் பூஜித்தால் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. மேலும் பஞ்சமி திதி பிப். 2ஆம் தேதி காலை 9:14 மணிமுதல் பிப்.3ஆம் தேதி காலை 6:52 மணிவரை நீடிக்கிறது. 


வசந்த பஞ்சமி 2025: செய்யக்கூடாதவை என்ன?


வசந்த பஞ்சமி அன்று சில பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகும். வசந்த காலத்தை வரவேற்கும் விதத்தில் வசந்த பஞ்சமி கொண்டாடப்படும் நிலையில், அன்றைய தினம் நீங்கள் மரங்கள், செடிகள் ஆகியவற்றை வெட்டக்கூடாது, இயற்கையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடவே கூடாது.


அன்றைய தினமும் புலால் உண்பது கூடாது என நம்பப்படுகிறது. மது அருந்துவதும் அசுபமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் நீங்கள் விரதம் இருந்து, சாத்வீகமான உணவுகளையே உண்ண வேண்டும். அதுவே சுபமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாதீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான கருத்துக்கள் மற்றும் நம்பிக்கைககளின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | பிப்ரவரி மாத ராசிபலன்: சனி, குரு மாற்றத்தால் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட், முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ