Vastu Tips: வீட்டின் மேல் ‘இவற்றின்’ நிழல் விழக் கூடாது!
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தில், கட்டிடக்கலை மற்றும் அதனுடன் தொடர்புடைய நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் சில விஷயங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டின் மீது சிலவற்றின் நிழல் படுவது மிகவும் அசுபமாக கருதப்படுகிறது. வீட்டின் மீது விழும் இந்த நிழல் அந்த வீட்டில் வாழும் நபர்களின் நல்வாழ்வை பாதிக்கும் என்பதால், அலட்சியம் செய்யக்கூடாது.
வீடு கட்டும் போதும் வங்கும் போதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை
கோயில்கள் நமக்கு நேர்மறை ஆற்றலை அளிக்கின்றன என்றாலும், கோயிலுக்கு அருகில் வீடு இருப்பது அசுபமாக கருதப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், கோவிலுக்கு மிக அருகில் வீடு இருக்க கூடாது. கோவிலின் நிழல் வீட்டின் மீது விழுவது நல்லதல்ல. இதனால் வீட்டில் உள்ளவர்களின் முன்னேற்றம் தடைபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
எனவே, வீட்டை கட்டும் போதோ, வாங்கும் போதோ, வீட்டின் முன் வீட்டை விட இரண்டு மடங்கு உயரம் வரை கோயில் இருக்கக் கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக , சூரியன், பிரம்மா, விஷ்ணு அல்லது சிவன் கோவில்கள், வீட்டின் பிரதான நுழைவாயிலின் முன் இருக்கக்கூடாது.
மேலும் படிக்க | வீட்டை நிர்மூலமாக்கும் ‘இந்த’ செடிகள் இருந்தால் உடனே அகற்றவும்..!!
வீட்டின் கிழக்கு, வடக்கு, வடக்கு திசையில் பெரிய பாறையோ, பெரிய கல்லோ, தூணோ கூட இருக்கக் கூடாது. இதன் நிழலும் வாழ்க்கையின் முன்னேற்றத்தை தடுக்கிறது.அதே போன்று வீட்டின் முன் பெரிய மரம், சுவர், பள்ளம், கிணறு போன்றவை இருக்கக் கூடாது. கோயிலைப் போலவே வீட்டில் மரத்தின் நிழல் விழுவதும் அசுபமானது.
வீட்டின் முன் எப்போதும் சேறு சகதி இருக்கக்கூடாது. வீட்டின் முன்புறம் அல்லது அதைச் சுற்றிலும் இது போன்ற தடைகள் இருந்தால், வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு இது தடைக்கல்லாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’ செய்தால் போதும்.!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ