பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’ செய்தால் போதும்.!!

வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல்  என்றென்றூம் நிறைந்திருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 18, 2022, 02:16 PM IST
  • சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன.
  • வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன.
  • விஷ்ணு பகவானின் அருள் இருந்தால், அன்னை லக்ஷ்மியின் அருள் கிடைக்க தாமதம் ஆகாது.
பர்ஸில் என்றென்றும் பணம் நிறைந்திருக்க வேண்டுமா... ‘இவற்றை’  செய்தால் போதும்.!! title=

தங்கள் பர்ஸ், வீட்டில் வைத்திருக்கும் பணப்பை அல்லது பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க இருக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா. ஆனால் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்க வேண்டிய நிலை கூட உண்டாகிறது. வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல்  என்றென்றூம் நிறைந்திருக்கும்.

சில விஷயங்கள் வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றை பர்ஸ் அல்லது பணப்பையில் வைத்திருப்பதால் பணம் தங்கும் என நம்பப்படுகிறது. ​​​​அதே சமயம் சிலவற்றை பர்ஸில் வைப்பதால், அசுப பலன்கள் கிடைக்கின்றன. 

பில்கள் அல்லது ரசீதுகள்: 

பில்கள் அல்லது ரசீதுகள் போன்றவற்றை பர்ஸ் அல்லது வாலட்டில் வைத்திருக்க வேண்டாம். அவற்றை வைத்திருப்பது அவசியம் என்றால், அவை தேவைப்படும் வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும். பலர் வீட்டின் அனைத்து பில்களையும் பர்ஸில் வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறார்கள், அது தவறு. அவை ராகு வடிவம் பெற்று பண இழப்பு, தேவையற்ற செலவுகளை உண்டாக்கும்.

மேலும் படிக்க | Astro: 2023 ஜனவரி வரை ‘இந்த’ ராசிகளை பாடாய் படுத்தும் கேது; தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!

கூர்மையான பொருட்கள்: 

கத்திகள், ஊசிகள், சாவிகள் போன்ற கூர்மையான அல்லது உலோகப் பொருட்களை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள். இப்படிச் செய்வதால் அன்னை லட்சுமி கோபமடைந்து, அந்த நபரின் வாழ்வில் படிப்படியாக வறுமையின் பிடியில் சிக்கத் தொடங்குகிறது.

தாமரையின் விதை:

தாமரையின் விதையை பர்ஸில் வைத்துக்கொண்டால் பணம் தனங்கும். அன்னை லக்ஷ்மி தேவிக்கு தாமரை மிகவும் பிரியமானதாக இருப்பதால், லட்சுமி தேவியின் அருள் பொழியும் என நம்பப்படுகிறது. இது உங்களுக்கு நிதி வரவையும், மன அமைதியையும் தரும்.

ஸ்ரீ யந்திரம்

உங்கள் பர்ஸில் ஒரு சிறிய ஸ்ரீ யந்திரத்தை வைத்திருப்பதன் மூலம், உங்களிடம் நேர்மறை ஆற்றல் இருக்கும். இது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்.

கோமதி சக்கரம்

பர்ஸில் 7 கோமதி சக்கரங்களை வைத்திருப்பது செல்வம் தரும். இதனால் உங்களுக்கு பணப் பற்றாக்குறை  ஒருபோதும் ஏற்படாது.

அரச இலை

அரச இலைகளில் விஷ்ணு வசிப்பதாக நம்பப்படுகிறது. விஷ்ணு பகவானின் அருள் இருந்தால், அன்னை லக்ஷ்மியின் அருள் கிடைக்க தாமதம் ஆகாது. எனவே, ஒரு அரச இலையை கங்கா நீரில் சுத்தம் செய்து, அதை உங்கள் பர்ஸில் சுத்தமாக வைத்திருங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Astro: தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என சாதிக்கும் ‘4’ ராசிகள்!

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News