பசுமை நிறைந்த செடிகள், மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவை. வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்பி, நமது மனதை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள செடிகள் உதவுகின்றன. அதோடு எதிர்மறை ஆற்றலை நீக்கி, அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும். அதிலும் குறிப்பிட்ட சில செடிகள், வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் செல்வ செழிப்பையும் கொண்டு வந்து சேர்க்கும். வீட்டிற்கு சகலவிதமான ஐஸ்வர்யங்களையும் அள்ளிக் கொடுக்கும் ஸ்னேக் பிளாண்ட் என்னும் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் ஸ்னேக் பிளாண்ட்


நம் வீட்டின் அழகை அதிகரிக்க உட்புறத்தில் வைக்கக் கூடிய சில செடிகள் உதவும். உட்புறச் செடிகள் வீட்டின் அழகை மட்டுமல்ல வாஸ்து சாஸ்திரத்தின் படி, இந்த தாவரங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை உருவாக்குகின்றன. பலரது வீடுகளில் நீங்கள் அடிக்கடி பார்க்கும் இந்த செடிகளில் ஒன்று ஸ்னேக் பிளாண்ட். இது ஒரு பொதுவான தாவரமாக இருந்தாலும், வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதை வீட்டில் நடுவதால் பல நன்மைகள் உண்டாகும். இது உங்கள் வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் வாழ்க்கையில் செல்வம் நிறைந்து, பணத் தட்டுப்பாட்டு என்பதே ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது.


மங்கலத்தைக் கொடுக்கும் ஸ்நேக் பிளாண்ட்


வாஸ்து சாஸ்திரத்தின் (Vastu Tips) படி, ஸ்நேக் பிளாண்டை வீட்டில் சரியான திசையில் வைப்பது மிகவும் முக்கியம். சரியான திசையில் வைக்கப்படும் ஸ்நேக் பிளாண்ட் உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகளை திறக்கிறது. இருப்பினும், இந்த செடி நேரடி சூரிய ஒளியில் வைக்கப்படுவதில்லை. லேசான சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும். வீட்டில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம் என்றாலும் படுக்கையறையில் ஸ்நேக் பிளாண்ட் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.


ஸ்நேக் பிளாண்ட் செடியை நட சரியான திசை எது?


ஸ்நேக் பிளாண்ட் செடியை நட வேண்டிய திசை குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஸ்நேக் பிளாண்ட் செடியை நடுவதற்கான சரியான திசை தெற்கு, கிழக்கு அல்லது தென்கிழக்கு என்று கருதப்படுகிறது. இந்த திசைகளில் ஸ்நேக் பிளாண்ட் செடியை வைப்பதன் மூலம், உங்களுக்கு கை மேல் பலன்கள் கிடைக்கும்.


மேலும் படிக்க | செவ்வாய்ப் பெயர்ச்சியால் ஏற்படும் குருமங்கள யோகத்தால் குபேரருக்கு நண்பராகும் 5 ராசிகள்!


ஸ்நேக் பிளாண்ட் வைக்கக் கூடாத சில இடங்கள்


வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஸ்நேக் பிளாண்ட் செடியை மேசைக்கு அடியில் அல்லது வேறு எந்த செடியின் அருகிலும் நட வேண்டாம். அதன் தொட்டி எப்போதும் தரையில் படும்படி வைத்திருங்கள். இது தவிர, தவறுதலாக கூட இந்த செடியை குளியலறையில் வைக்கக்கூடாது.


ஸ்நேக் பிளாண்ட் செடியை நடுவதால் கிடைக்கும் நன்மைகள்


வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ஸ்நேக் பிளாண்ட் நடுவது நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். வீட்டில் எந்த எதிர்மறை சக்தியும் இருக்காது. மேலும், உங்கள் குடும்பத்தில் உறவுகளில் அன்பும் நம்பிக்கையும் இனிமையும் நிறைந்திருக்கும். எனவே, இந்த செடியை உங்கள் படுக்கையறையில் நடுவது நன்மை பயக்கும். வீட்டில் இருப்பவர்கள் மன அழுத்தத்தை போக்க ஸ்நேக் பிளாண்ட் உதவிகரமாக இருக்கும்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | தாம்பத்திய சுகம் முதல் குழந்தை பிறப்பு வரை... சுக்கிரனால் விருத்தியாகும் சுக்கிலம்! வாழவைக்கும் சுக்கிரன்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ