வீட்டில் மயிலிறகு வைக்கலாம்... ஆனால்... வாஸ்து நிபுணர்கள் கூறுவது என்ன..!!
வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது.
வீட்டில் மயிலிறகு வைப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மயில் தோகைகள் இருக்கும் வீட்டில் கிருஷ்ணரின் அருள் பரிபூரணமாக இருக்கும் என சாஸ்திரங்கள் கூறப்படுகிறது . இது தவிர வீட்டில் மயில் இறகு வைப்பதால் பொருளாதார நிலையும் வலுப்பெறும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் மயில் இறகு வைப்பது உங்கள் அதிர்ஷ்டத்தை பலப்படுத்துகிறது மற்றும் வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டு வரும். ஆனால் நீங்கள் அதை சரியான திசையில், சரியான முறையில் வைத்தால் மட்டுமே உங்கள் வாழ்க்கையில் மயில் இறகு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
எந்தெந்த திசைகளில், எந்தெந்த இடங்களில் மயில் இறகு வைப்பதைத் தவிர்க்க வேண்டும், என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்
மயில் இறகுகளை வைக்க வடகிழக்கு திசை சரியல்ல
மயில் இறகுகளை வடகிழக்கு திசையில் வைத்தால், அது வீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. மயில் இறகுகளை வடகிழக்கு திசையில் வைப்பதால் நிதி இழப்பு மற்றும் செலவுகள் அதிகரிக்கும் என்கின்றனர் வாஸ்து சாஸ்திர (Vastu Tips) நிபுணர்கள். எனவே, எதிர்மரை ஆற்றலை தவிர்க்க வாஸ்து படி, மயில் இறகுகளை வடகிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்கவும். எனினும் வடக்கு திசையில் மயில் இறகுகளை வைக்கலாம்.
மயில் இறகுகளை லாக்கரிலோ அல்லது பெட்டகத்திலோ வைக்கக் கூடாது
விலைமதிப்பு மிக்க வீட்டுப் பொருட்கள், நகைகள் மற்றும் பணத்தை பாதுகாப்பாக லாக்கரில் வைத்திருக்கும் நிலையில், அதற்குள் மயில் இறகுகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். மயில் இறகுகளை மூடிய நிலையில் வைப்பதால் எதிர்மறை ஆற்றல் ஏற்படுகிறது. மேலும், இதனால் உங்கள் செலவுகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதனால் உங்கள் கடனும் அதிகரிக்கலாம். எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி, மயில் இறகுகளை பெட்டகம் அல்லது லாக்கரில் வைக்கக் கூடாது.
மயில் இறகுகளை ப்ர்ஸ் அல்லது வாலட்டில் வைப்பது நல்லதல்ல
வீட்டில் மயில் இறகை வைத்திருப்பது நிதி ஆதாயத்தைத் தருகிறது மற்றும் மகாலட்சுமி தேவியின் அருள் உங்கள் மீது இருக்கும். ஆனால் உங்கள் பர்ஸில் மயில் இறகை வைக்காதீர்கள். அது நிதி இழப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதனால் உங்கள் செலவுகள் அதிகரிக்க ஆரம்பிக்கலாம் அல்லது நீங்கள் பணத்தை இழக்க நேரிடலாம். மயில் இறகுகளை மூடி வைக்கக் கூடாது. அவை சுதந்திரமாக காற்றில் பரக்கும் நிலையில் இருக்க வேண்டும்
மயிலிறகை சமையலறையில் வைப்பது நல்லதல்ல
மயில் இறகுகளை சமையலறையில் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். மயில் இறகுகளை சமையலறையில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் கொண்டு வருவதோடு மட்டுமல்லாமல் மயில் இறகுகளை அவமதிக்கும் விஷயமாகும். மயில் இறகுகளை சமையலறையில் வைத்திருக்கும் நிலையில், உணவுப் புகை, எண்ணெய் போன்றவற்றை மயில் தோகைகளில் படிவதால் உங்கள் சமையலறையில் மட்டுமின்றி வீட்டிலும் எதிர்மறை ஆற்றல் தங்கி, பாதிப்பை ஏற்படுத்தும்.
பூஜை அறையில் மயில் தோகை வைப்பது உசிதமல்ல
மயில் இறகுகளை வீட்டில் வைப்பதால் ஏற்படும் சுப பலன்களைப் பெற விரும்பினால், பூஜை அறையில் மயிலிறகை வைக்கவே கூடாது என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். இதன் மூலம் நீங்கள் மயில் இறகுகளின் எதிர்மறை தாக்கம் வீட்டிஅ பாதிக்கும். கோவில்களில், மயில் இறகால் செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வீட்டில் இதைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே, பூஜை அறைகளில் மயிலிறகை வைப்பதைத் தவிர்க்கவும். எனினும், இது பற்றிய வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் பூஜை அரையில் வைப்பது நல்லது என்கின்றனர். எனவே இது குறித்து வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ