Sukran Peyarchi Palangal:ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொள்கின்றன. கிரகங்களின் பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளுக்கும் இருக்கும். ஆடம்பர வாழ்க்கை , செல்வத்தைத் அள்ளித் தருபவரான சுக்கிரன் மேஷ ராசிக்கு மாறப் போகிறார்.  சுக்கிரன் நாளை, அதாவது ஏப்ரல் 25 தேதி அதிகாலை மீன ராசியில் இருந்து விலகி மேஷ ராசிக்குள் பெயர்ச்சியாக உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்


சுக்கிரனின் இந்த  ராசி மாற்றத்தினால், அதிர்ஷ்டத்தை அள்ளிப் போகிற ராசிகளை அறிந்து கொள்ளலாம். சுக்கிரனின் அருளால் இவர்கள் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெறலாம். ஜாக்பாட் பலன்களை பெறும் ராசிகள் (Lucky Zodiacs) எவை என தெரிந்து கொள்வோம்...


துலாம் ராசி


சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிகளுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சுக்கிரன் துலாம் ராசிக்கு அதிபதி. மேலும் சுக்கிரன் உங்கள் ராசியின் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். எனவே இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் ஆளுமையும் மேம்படும். இந்த நேரத்தில், நீங்கள் புதிய வாகனம் அல்லது நிலம் வாங்கலாம் மற்றும் சொந்தமாக புதிய தொழில் தொடங்கலாம். மேலும், திருமணமானவர்களின் மண வாழ்க்கை இந்த நேரத்தில் அற்புதமாக இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.


மகர ராசி


மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சாதகமாக அமையும். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஐந்தாம் வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் உங்கள் பிள்ளைகள் தரப்பில் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். அதாவது, குழந்தைக்கு நல்ல வேலை கிடைக்கலாம் அல்லது திருமணம் நிச்சயம் செய்யலாம். இந்த காலகட்டத்தில் வேலையில் இருப்பவர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும், உங்கள் செல்வாக்கும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அதேசமயம் நீங்கள் ஒரு மாணவராக இருந்தால் உங்களுக்கு விருப்பமான உயர் கல்வி நிறுவனத்திலும் சேர்க்கை பெறலாம்.


மேலும் படிக்க | மே 1 குரு பெயர்ச்சி: இந்த ராசிகளின் வாழ்க்கை மாறும், அள்ளிக்கொடுப்பார் குரு


கடக ராசி


சுக்கிரன் பெயர்சி கடக ராசிகளுக்கு சாதகமாக இருக்கலாம். ஏனெனில் உங்கள் ராசியிலிருந்து ஒன்பதாம் வீட்டில் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு பல வகைகளில் சாதகமாக இருக்கும். மேலும், இந்த நேரத்தில் நீங்கள் ஆன்மீக அல்லது சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் ஒரு குறுகிய அல்லது நீண்ட பயணத்தை மேற்கொள்ளலாம். அதனால், ஆதாயமும் அடைவீர்கள். மறுபுறம், நீங்கள் ஒரு புதிய வாகனம், கடை, பிளாட் அல்லது நிலம் வாங்க விரும்பினால், அதற்கு உகந்த நேரம் இது. இந்த மாற்றத்தின் தாக்கத்தால் உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த நேரத்தில் வேலையை மாற்ற விரும்புபவர்களின் விருப்பம் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். இந்த நேரத்தில், போட்டி மாணவர்கள் எந்த தேர்விலும் வெற்றி பெறலாம்.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி பலன்கள்: இந்த ராசிகளுக்கு பணம், புகழ், அரச ராஜ வாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ