சுக்கிரன் பிப்ரவரி 12 ஆம் தேதி அதிகாலை 4:52 மணிக்கு மகர ராசியில் பெயர்ச்சியடைந்தார். அவர், மார்ச் 7ஆம் தேதி வரை அங்கிருக்கிரார். மகர ராசியுடன் இருக்கும்போது, சனியுடன் நேர்மறையான தொடர்பை உருவாக்கும் சுக்கிரன் பெயர்ச்சி சிலருக்கு நிதி ஆதாயங்களைக் கொடுத்தால், சிலருக்கு செலவினங்களை அதிகரிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகர ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் சுமார் மூன்று வாரங்கள் தான் இருந்தாலும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திச் செல்லும். 12 ராசிகளுக்குமான சுக்கிரன் பெயர்ச்சி பலன்களை தெரிந்துக் கொள்வோம். 


மேஷம்
குடும்பம், செல்வம், தொடர்பு, திருமணம் மற்றும் கூட்டாண்மை தொடர்பான 2வது மற்றும் 7வது வீடுகளை பார்க்கும் சுக்கிரன் பத்தாம் வீட்டிற்கு செல்வதால், பணம் சம்பாதிப்பதிலும், தொழிலில் முன்னேறுவதிலும் அதிக கவனம் செலுத்தும் காலமாக இருக்கு . குறிப்பாக வணிகத்தில் இருப்பவர்களுக்கு, அதிக லாபம் ஏற்படுத்துவடன், பல்வேறு முயற்சிகளை வெற்றியடையச் செய்யும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். கவலைகளைக் கொடுக்காத சுக்கிரன் பெயர்ச்சி இது


ரிஷபம்
நீண்ட கால நிதி நிலைமையை பாதிக்கும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் நேரமாக இந்த சுக்கிரன் பெயர்ச்சி அமையும்.  அதிக நம்பிக்கையும், மன உறுதியும் அதிகரிக்கும் காலம் இது. இந்த காலகட்டம் உங்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் முக்கியமானதாக இருக்கும். ஆனால், ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள், குறிப்பாக செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.


மிதுனம்


மகர ராசியில் சுக்கிரன் சஞ்சாரம் செய்யும் போது, மிதுன ராசியினர் தேவையில்லாத செலவுகளைச் சந்திக்க நேரிடலாம், விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் சூழ்நிலை ஏற்படும். இது எதிர்பாராத செலவுகள் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.


மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்... அருள் மழை பொழிவார் சனி


கடகம்
கடக ராசியில் பிறந்த நபர்களுக்கு, சுக்கிரன் பெயர்ச்சி சாதகமானதாக இருக்கும். கூட்டு முயற்சிகள் மூலம் நிதி ஆதாயங்கள் ஏற்படும்.  ஒட்டுமொத்தமாக பார்த்தால், செல்வ நிலை உயரும், உறவுகளுடன் நல்ல உறவுகள் ஏற்படும்.தொழில் ரீதியாகவும் சுக்கிரம் பெயர்ச்சி சாதகமானதாகவே இருக்கும்.


சிம்மம்
மகர ராசியில் சுக்கிரன் சஞ்சாரத்தின் போது, சிம்ம  ராசிக்காரர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். தொழில்முறை பொறுப்புகள் அல்லது இடமாற்றம் கூட ஏற்படலாம். அவை தொழில் வளர்ச்சிக்கு காரணமாக மாறும். நிதி விவகாரங்களில் தற்காலிக தடைகள் ஏற்படலாம்.


கன்னி


ஆக்கபூர்வமான யோசனைகள் எழும், இந்த யோசனைகள் பண வரவை கொண்டு வந்து சேர்க்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணத்தை முதலீடு செய்தால் லாபம் அபரிதமாக கிடைக்கும் காலம் இது.
 
துலாம்


மகர ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் போது,சமூக வட்டாரங்களில் நல்ல பெயர் கிடைக்கும் என்றாலும், சர்ச்சைகளில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுக்கிரன் பெயர்ச்சியினால், தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்கலாம்.


விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு நேர்மறையான குணங்களை மேம்படும் காலமாக இந்த சுக்கிரன் பெயர்ச்சி இருக்கும். தகவல் தொடர்பு திறன் அவர்களின் தொழில்முறை முயற்சிகளில் சாதகமான பலன்களைக் கொடுக்கும். மகர ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி விருச்சிக ராசியினருக்கு சாதகமான காலமாக இருக்கும்.


மேலும் படிக்க |  30 ஆண்டுக்கு பின் கும்பத்தில் சனி அஸ்தமனம்.. எந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்


மகரம் 
உணர்வுரீதியிலான முடிவுகளை சுக்கிரன் எடுக்க வைப்பார். வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் லாபம் கிடைக்கும். குடும்பம் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் இருக்கும். ஆன்மீகத்தின் மேல் நாட்டம் ஏற்படும்.  


தனுசு


குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம்.  இந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் வழி பிறக்கும். புதிய வாய்ப்புகள் வரலாம், ஆனால் காரியத்தடைகளும் ஏற்படும். உணவில் கவனம் செலுத்துவது மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பது முக்கியம்.


கும்பம் 
இந்த காலகட்டத்தில், புதிய இடத்தில் வீடு வாங்கும் வாய்ப்பு, தனிப்பட்ட வசதிகளை செய்துக் கொள்வதற்கான காலகட்டமாக இந்த சுக்கிரன் பெயர்ச்சி இருக்கும். தாயின் உடல்நிலை பாதிக்கப்படலாம். சொத்து அல்லது ரியல் எஸ்டேட் சொத்துக்களை விற்கும் முயற்சிகள் வெற்றி பெறும். 


மீனம்
பணியிடத்தில், உங்களது முயற்சிகளுக்கு பாராட்டுகள் வந்து குவியும். அர்ப்பணிப்பு மற்றும் நேர்மைக்கான வெகுமதிகள் கிடைப்பதுடன், உங்களை அங்கீகாரம் செய்வது மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழில் வளர்ச்சி மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புகல் உண்டு.  


மேலும் படிக்க | மகரத்தில் சுக்கிரன்... நெருக்கடிகளை சந்திக்கும் சில ராசிகளும்... சில பரிகாரங்களும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ