சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான பண வரவு, லாபம், ஆடம்பர வாழ்க்கை

Saturn Transit, Shani Asta: அனைத்து கிரகங்களிலும் சனி பகவான் மிக முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் ஒரே ராசியில் அதிக காலத்திற்கு இருப்பதால், ராசிகளில் இவரது தாக்கமும் அதிகமாக உள்ளது.

சனியின் சிறு மாற்றங்களும் பெரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இரு நாட்களுக்கு முன்னர் சனி அஸ்தமன நிலைக்கு மாறினார். அவரது இந்த மாற்றத்தால் அனைத்து ராசிகளின் வாழ்விலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும், சிலருக்கு இதனால் பணக்கார யோகம் உருவாகும். இவர்களது பண வரவு அதிகமாகும். செல்வச் செழிப்பு அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /10

நீதியின் கடவுளாக கருதப்படும் சனி பகவான் மக்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கிறார். ஒருவர் மீது சனியின் அருள் பார்வை இருந்தால், அவரது வாழ்வில் பல வித செல்வங்களை பெற்று மகிழ்ச்சிக்கு குறை இல்லாமல் வாழ்வார். 

2 /10

சனி பகவான், பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமானார். ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒரு கிரகம் அஸ்தமனமானால், அந்த கிரகத்தின் செல்வாக்கு குறையும். இப்படிப்பட்ட நிலை, சில ராசிகளை பாதிக்கும், சில ராசிகளுக்கு நல்ல பலன்களை அளிக்கும்.

3 /10

சனியின் அஸ்தமன நிலையில் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நற்பலன்கள் உருவாகும். இவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். திடீர் பண வரவு இருக்கும். சனி அஸ்தமனத்தால் நற்பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

4 /10

கும்பத்தில் சனியின் அஸ்தமனத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். 

5 /10

கும்பத்தில் சனியின் அஸ்தமன நிலை, மிதுன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகளை திறக்கும். நிதி ஆதாயத்திற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். பண வாரவு அதிகமாகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த பல பணிகள் தற்போது நல்ல விதமாக நடந்து முடியும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

6 /10

வணிகத்தில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு தற்போது அதிக லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்படும். பல நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும். நம்பிக்கையும் நன்மதிப்பும் அதிகரிக்கும்.   

7 /10

விருச்சிக ராசிக்காரர்களுக்கு கும்பத்தில் சனியின் அஸ்தமன நிலை, பல சுப பலன்களை அளிக்கும். சமய காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உழைக்கும் மக்களுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். நீண்ட நாட்களாக செய்து வந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.  

8 /10

கும்பத்தில் சனியின் அஸ்தமனம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை அள்ளிக்கொடுக்கும். அலுவலக பணி தொடர்பான விஷயங்களில் திருப்தி அடைவீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்வீர்கள். இந்த பயணத்தால் அனுகூலமான நன்மைகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். 

9 /10

சனி பகவனைன் அருள் பெற சனி சாலிசா, கோளறு பதிகம், ஹனுமான் சாலிசா ஆகியவற்றை படிக்கலாம். மேலும் ஏழை எளியவர்களுக்கு உதவும் நபர்களை சனி பகவான் எப்போதும் சோதிக்க மாட்டார்.

10 /10

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.