Ram Navami 2023: ராம நவமி பண்டிகை இந்த ஆண்டு 30 மார்ச் 2023 (இன்று) நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. புராண கதைகளின், ராமர் ராம நவமி அன்று பிறந்தார். இந்து நாட்காட்டியின்படி, நவமி திதியில் ராம நவமி கொண்டாடப்படுகிறது. இதனால் ஸ்ரீ ராமரை வழிபட ராம நவமி சிறந்த நாளாக கருதப்படுகிறது. ராம நவமி பண்டிகை இந்து மதத்தில் சிறப்பு வாய்ந்தது. இதனிடையே இந்த ஆண்டு ராம நவமியில் மிகவும் அரிதான யோகம் உருவாகிறது. மேலும் நட்சத்திரங்களின் கலவையானது மிகவும் மங்களகரமாதாகவும், மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இது பல ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம நவமி அன்று பல மங்களகரமான அரிதான யோகம் உருவாகிறது
இன்று, ராம நவமியில், பல மங்களகரமான யோகங்களின் தற்செயல் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்படி இன்று சூரியன், புதன், குரு ஆகியோர் மீனத்திலும், அதேசமயம் சனி கும்பத்திலும், இது தவிர மேஷ ராசியில் சுக்கிரனும் ராகுவும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். இந்த கிரக நிலைகள் இன்று ராம நவமியில் மாளவ்ய , கேதார, ஹம்ஸ, மகாபாக்கிய போன்ற யோகத்தை உண்டாக்குகிறது. இது அனைத்து மக்களின் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க வைக்கும். எனவே அந்த ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.


மேலும் படிக்க | Ram navami 2023: ராம நவமி நாளில் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை..!


ரிஷப ராசி: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்று ராம நவமி மிகவும் உகந்த நாள். மக்களின் ஒத்துழைப்போடு அனைத்து பணிகளும் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள், புதிய பொறுப்பைப் பெறலாம். முதலீடு செய்வதற்கு இது மிகவும் நல்ல நேரம். வியாபாரத்தில் புதிய கூட்டாண்மைகள் உருவாகும்.


துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராமநவமி நல்ல நாட்களைக் கொண்டு வரும். பொருளாதார ஆதாயம் உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் அடையலாம். நம்பிக்கை அதிகரிக்கும். சில நல்ல செய்திகளைக் பெறலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.


சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்களுக்கு ராமநவமி பல வழிகளிலும் பலன்களைத் தரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பழைய கடனில் இருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் வருமானம் உண்டாகும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அதிர்ஷ்டம் துணை நிற்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | ராம நவமி 2023 தேதி : பூஜை செய்ய ஏற்ற நேரமும், சொல்ல வேண்டிய மந்திரமும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ