வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய்! இனி ‘இந்த’ ராசிகள் தொட்டதெல்லாம் வெற்றி தான்!
ஜோதிடத்தில், செவ்வாய் கிரகம் வலிமை மற்றும் துணிச்சலின் காரணியாக கருதப்படும் நிலையில், ஜனவரி 13 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைவது, ஜோதிடத்தில் முக்கியமானதாக கருதப்படுகிறது.
வக்ர நிவர்த்தி அடையும் செவ்வாய் பலன்கள்: ஒவ்வொரு கிரகம்-விண்மீன்களும் ஏதேனும் ஒரு ராசியுடன் தொடர்புடையவை. அத்தகைய சூழ்நிலையில், கிரகங்கள் ராசிகளை மாற்றும்போதெல்லாம், அனைத்து ரசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பெயர்ச்சி, செவ்வாய் வக்ர பெயர்ச்சி, செவ்வாய் வக்ர நிவர்த்தி என அனைத்திலும், அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஜோதிட சாஸ்திரப்படி இம்முறை ஜனவரி 13, 2023 முதல் செவ்வாய் கிரகம் வக்ர நிவர்த்தி அடைய போகிறது.
ரிஷபத்தில் வக்ர நிவர்த்தி அடைந்தாலும், அது 12 ராசிகளையும் பாதிக்கும். செவ்வாய் வீரம் மற்றும் துணிச்சலின் காரணி என்று அழைக்கப்படுகிறது. பல ராசிக்காரர்களுக்கு முன்னேற்றக் கதவுகள் திறக்கும். மேலும் அவர்களுக்கு நிறைய பண வரவு கிடைக்கும். அந்த ராசிகள் எவை என்று தெரிந்து கொள்வோம்.
சிங்கம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் கிரகத்தில் வக்ர நிவர்த்தி நல்ல செய்திகளைத் தரும். இந்த நேரத்தில் தொழில் ஒரு புதிய பரிமாணத்தைப் பெறும். இந்த ராசிக்காரர்கள் புதிய வேலை தேடுபவர்களின் விருப்பம் இந்தக் காலத்தில் நிறைவேறும். அதே சமயம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவார்கள்.
மேலும் படிக்க | குருவின் அருளால் ‘இந்த’ ராசிகளின் வாழ்க்கை அமோகமாக இருக்கும்!
விருச்சிகம்
செவ்வாய் சஞ்சாரத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. பண ஆதாயத்தால் பொருளாதார நிலை மேம்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கும் நல்ல நாட்கள் வரப் போகிறது. செவ்வாய் வக்ர நிவர்த்தியினால் முதலீட்டில் நிறைய பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அமையும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி நிலவும், மனைவியுடனான உறவு இனிமையாக இருக்கும்.
மீனம்
செவ்வாயின் வக்ர நிவர்த்தியினால் மீன ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். வக்ர நிவர்த்தியின் போது எந்த வேலையில் கை வைத்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். மன அமைதி கிடைத்த பிறகு மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
பரிகாரங்கள்
செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்த வேண்டுமானால், தினமும் ஹனுமனை வழிபடுங்கள். 21 செவ்வாய்கிழமை விரதத்தை கடைபிடிக்கவும். தினமும் காலையில் குளித்த பின் சிவப்பு நிற ஆடைகளை அணியுங்கள். இதற்குப் பிறகு ஓம் க்ரான் கிரியான் க்ரௌண் ச: பௌமாய நம மந்திரத்தை 3, 5 அல்லது 7 சுற்றுகள் வரை உச்சரிக்கலாம். இந்த செயல்களைச் செய்வதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் அனுகூலத்தைப் பெறுவீர்கள். மேலும் உங்கள் வெற்றிக்கான பாதை வகுக்கப்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Astro Traits: காதல் வலையில் சிக்க விரும்பாத ‘சில’ ராசிக்காரர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ