Vinayagar Chaturthi 2024: இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் முக்கிய இந்து பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. அறிவுக் கூர்மை, புத்திசாலித்தனம், வெற்றி ஆகியவற்றை கொடுக்கும் தெய்வம் கணபதி. எந்த வேலையை தொடங்கினாலும், பிள்ளையாரை வணங்கி தொடங்குவது வெற்றிகளை கொடுக்கும் என்பது ஐதீகம் விக்னங்களை நீக்கும் விநாயகரை வழிபட நம் வினைகள் எல்லாம் அகலும். பிள்ளையாரை மனம் உருகி வழிபடும்போது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சி நிம்மதி ஆகியவை நிலைத்திருக்கும். துன்பங்கள் விலகி இன்பங்கள் வாழ்க்கையில் வந்து சேர, சதுர்த்தியில் விநாயகரை வழிபட்டாலே போதும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 சதுர்த்தி திதி விநாயகருக்கு உரியது. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. வளர்பிறையில் வரும் சதுர்த்தி திதி, வழங்களை கொடுக்கக் கூடியது. அதில் ஆண்டுக்கு ஒரு முறை வருவது விநாயகர் சதுர்த்தி. இந்நாளில், பிள்ளையாரை மனம் உருகி வேண்டினால், மனதில் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். இந்த முறை சதுர்த்தி திதி சனிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பு.


சனிபகவான், இந்த மூக்குலகில் உள்ள அனைவரையும் ஆட்டி படைப்பவர். ஆனால், அவரால் ஒன்றும் செய்ய முடியாது இருவர் உண்டு என்றால் அது விநாயகரும் பகவான் அனுமானம்தான். எனவே விநாயகரை வழிபடுபவர்கள், சனி பகவானின் தொல்லையிலிருந்து விடுபட்டு, நிம்மதியான வாழ்க்கை வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.


விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை எழுந்த குளித்து, மண் பிள்ளையாரை பிடித்து, அதற்கு பூமாலை அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை ஆகியவற்றை அணிவித்து, வஸ்திரம் சாற்றி, அஷ்டோத்திர நாமாவளி ஜெபித்து அர்ச்சிக்க வேண்டும். விநாயகருக்கு பிடித்த நைவேத்தியங்களான, தேங்காய் கொழுக்கட்டை, பாயாசம், சுண்டல், ஆகியவற்றை தயாரித்து, நைவேத்தியம் செய்து, கற்பூர தீபம் காட்டி வழிபட வேண்டும்.


மேலும் படிக்க | சனிபகவானும் ஷஷ ராஜயோகமும்... இந்த ராசிகளை 2025 மார்ச் வரை பிடிக்கவே முடியாது


வீட்டில் விநாயகர் சிலையை பூஜைக்காக வைக்கும் போது சரியான திசையில் வைத்து வணங்குவது சிறப்பு. வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது நல்லது. அதற்கு சாத்தியம் இல்லை என்றால், கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையிலும் சிலையை வைத்து பூஜை கலாம்.


விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய சிறந்த நேரம் (Vinayagar Chathurthi Pooja TIme)


காலை 7 : 45 மணி முதல் 8 :45 மணி வரை நல்ல நேரம் இருக்கும் போது விநாயகரை வழிபடுவது சிறந்தது. இவ்வளவு சீக்கிரம் பூஜை செய்ய இயலாது என்றால் 10.30 மணிக்கு மேல் வழிபாட்டை தொடங்கலாம். ஏனென்றால் சனிக்கிழமை அன்று 9:00 மணி முதல் 10.30 மணி வரை ராகு காலமாக உள்ளது. அதோடு மதியம் 1 மணிக்கு முன்னதாக பூஜையை முடித்து விட வேண்டும்.


விநாயகர் சதுர்த்தி அன்று, பிள்ளையாரை, ஆனை முகனை, மனம் உருக வேண்டினால், வாழ்க்கையில் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தும் நீங்கி, சுபிட்சம் பெருகி, ஒளிமயமான எதிர்காலம் அமையும். ஆவணி மாதம் சதுர்த்தியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி, தமிழ்நாடு உள்ளிட்டத்தின் மாநிலங்களில், மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. அதே நேரம் மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் வரை கொண்டாடப்படுகிறது.


பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி.. அனைத்திலும் வெற்றி, ராஜாதி ராஜ வாழ்க்கை இந்த ராசிகளுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ