How To Please Shani Dev: சனிக்கிழமை நீதியின் கடவுளான சனியை வணங்கும் நாளாக கருதப்படுகிறது. வேதங்களில், சனி பகவான் ஒரு எரிச்சலான கிரகம் என்று அழைக்கப்படுகிறார். அவரின் கோப பார்வை பட்டால் எப்படியான உயரமான பதவியில் இருந்தாலும், சரிவதற்கு நீண்ட நேரம் ஆகாது. அதேநேரத்தில் அவரைபோல் உங்களை உச்சாணிக் கொம்பில் கொண்டு வைக்கக்கூடிய கிரகமும் இல்லை. ஆனால், அவரின் ஆரோக்கிய பார்வை உங்களின் மீது பட வேண்டும். சனி பகவானின் அனுகிரகம் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால், சனிக்கிழமைகளில் இந்த விஷயங்களை நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனிக்கிழமை பரிகாரங்கள் 


கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது அல்லது எண்ணெய் தானம் செய்வது சனிக்கிழமை மங்களகரமானதாக கருதப்படுகிறது. சனி தேவ் இந்த பரிகாரத்தில் மகிழ்ச்சியடைகிறார். ஆனால் சனிக்கிழமையன்று கடுகு எண்ணெயை வாங்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆனால், முன்பு வைத்திருந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | Shani Uday: பாவம் போனா போகுது என சனீஸ்வரர் கண்டு கொள்ளாத ராசிகள் எவை தெரியுமா?


விலங்குகளுக்கு உணவளிக்கவும்


சனிபகவானை மகிழ்விக்க, சனிக்கிழமை அன்று எள், வெல்லம் சேர்த்து லட்டு செய்து படைக்கவும். இதன் மூலம் சுப பலன்கள் கிடைக்கும். மேலும், சனிக்கிழமையன்று கருப்பு பறவை, கருப்பு மாடு அல்லது கருப்பு நாய்க்கு ரொட்டி-தானமாக வழங்கலாம். இந்த செயல்களை செய்வதன் மூலம், சனி தேவரின் ஆசிகள் பொழிவார்.


சனிக்கிழமையன்று எறும்புகளுக்கு எள் வைக்கவும். அதே போல் பகலில் சுந்தர்கண்டம் ஓதவும். இதைச் செய்வதன் மூலம் ஒருவருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். சனிக்கிழமைகளில் பிச்சைக்காரர்களுக்கு கருப்பு உளுந்தை தானம் செய்யுங்கள். மாலையில் உங்கள் வீட்டில் தூபம் போடுங்கள்.


பிரம்ம முகூர்த்தம்


சனிக்கிழமையன்று நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்கிறீர்கள் என்றால் அரச மரத்துக்கு தண்ணீர் ஊற்றி வழிபடவும். பின்னர், 'ஓம் ஷன் ஷனைச்சராய நம' என்ற மந்திரத்தை உச்சரித்து, சனி தேவனை வணங்கவும். பிறகு அரச மரத்தைத் தொட்டு 7 முறை சுற்றி வரவும். இந்த நடவடிக்கைகள் மூலம், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் வரத் தொடங்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | 4 நாட்களில் 'எதிரி கிரகங்களின்' கூட்டணி முடிகிறது! சனி பகவானின் ஆசி இனி உங்களுக்கே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ