இந்த வாரம் எப்படி இருக்கு? யாருக்கு சூப்பர், யாருக்கு சுமார்? வார ராசிபலன் இதோ
Weekly Horoscope: ஆகஸ்ட் 08 முதல் ஆகஸ்ட் 14 வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு நேரம் சாதகமாக உள்ளது? யார் ஜாக்கிரதையாக இருக்க வெண்டும்? இந்த பதிவில் விரிவாக காணலாம்.
வாராந்திர ராசிபலன் 8-14 ஆகஸ்ட் 2022: ஆகஸ்ட் 8, 2022 முதல் புதிய வாரம் தொடங்கியுள்ளது. இந்த வாரம் கிரகங்கள் மற்றும் ராசிகளின் நிலை மாற்றத்தால் பல ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். அதேசமயம் பல ராசிக்காரர்கள் பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். ஆகஸ்ட் 08 முதல் ஆகஸ்ட் 14 வரை அனைத்து ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு நேரம் சாதகமாக உள்ளது? யார் ஜாக்கிரதையாக இருக்க வெண்டும்? இந்த பதிவில் விரிவாக காணலாம்.
மேஷம்:
இந்த வாரம் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். இந்த வாரம் புதிய வேலையைத் தொடங்கலாம். இந்த நேரத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். நீண்ட பயணத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரம் நீங்கள் பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடும். உறவில் விரிசல் வரலாம். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். உங்களின் பணி பாணியால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள். காதலுக்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கடகம்:
கடக ராசிக்காரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். இந்த காலகட்டத்தில் பணம் குவிப்பதில் வெற்றி பெறுவீர்கள். தேவையற்ற செலவுகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க வேண்டாம்.
மேலும் படிக்க | சுக்கிரன் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களுக்கு சலசலப்பு ஏற்படும்
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களே, உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். குடும்ப அமைதி நிலைத்திருக்கும். சிக்கிய பணத்தை மீட்க முடியும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களின் குடும்பத்தின் சூழல் இனிமையாக இருக்கும். புதிய நபர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம் அடையலாம். இந்த வாரம் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும்.
துலாம்:
இந்த காலகட்டத்தில் புதிய வருமானங்கள் உருவாகும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.
விருச்சிகம்:
தொழிலில் வெற்றி கிடைக்கும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்வது நல்லது. அவசரத்தில் முதலீடு செய்வதால் பணம் எங்காவது சிக்கலாம். ஆகையால் முதலீடுகளில் கவனம் தேவை.
தனுசு:
இந்த வாரம் நீங்கள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க சோம்பலாக இருக்கக்கூடும். பழைய நண்பர்களுடன் சந்திப்பு சாத்தியமாகும். குடும்ப உறுப்பினர்களுடன் தகராறு ஏற்படலாம்.
மகரம்:
மகர ராசிக்காரர்கள் இந்த வாரம் எந்த ஒரு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன் புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழிலில் வெற்றி பெறலாம்.
கும்பம்:
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் பொருளாதார வரவு செலவுத் திட்டத்தை உருவாக்க வேண்டும். இந்த வாரம் யாரிடமும் கடன் வாங்குவதை தவிர்க்கவும். பயணம் மேற்கொள்ளப்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு துறையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்வீர்கள். யாரையும் நம்புவதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள். அவசரமாக எடுக்கும் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | அடுத்த 4 மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் நிச்சயம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ