Weekly Horoscope (November 7-13): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!
வார ராசிபலன் நவம்பர் 7- 13: நவம்பர் மாத முக்கிய கிரக மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் நவம்பர் 7 முதல் நவம்பர் 13, 2022 வரையிலான வாரம், மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வார ராசிபலன் நவம்பர் 7- 13 & கிரக பெயர்ச்சிகள்: இந்த வாரம் சந்திரன் ஆரம்பத்தில் மேஷ ராசியில் இருக்கும். அதன்பின் 13ம் தேதி ரிஷபம், மிதுனம் ஆகிய ராசிகளை கடந்து மாலை 4:50 மணிக்கு மேல் கடக ராசிக்குள் நுழைகிறது. இந்த வாரம் முழுவதும் சூரியன் துலாம் ராசியிலும், செவ்வாய் மிதுன ராசியிலும், வியாழன் மீனத்திலும், சனி மகரத்திலும், ராகு மேஷத்திலும் இருப்பார்கள். புதன் ஆரம்பத்தில் துலாம் ராசியில் தங்கி, நவம்பர் 13ஆம் தேதி இரவு 8:58 மணி முதல் விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். சுக்கிரன் ஆரம்பத்தில் துலாம் ராசியில் தங்கி, நவம்பர் 11 இரவு 7:25 முதல் விருச்சிக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்நிலையில் நவம்பர் 7 முதல் நவம்பர் 13, 2022 வரையிலான வாரம், மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்
கடந்த வாரத்தை விட இந்த வாரம் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், திருமண உறவுகள் கை கூடும். திருமணம் ஆனவராக இருந்தால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும். காதல் விவகாரங்களில் வெற்றி பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தை நம்புவதற்கு பதிலாக, உங்கள் கடின உழைப்பை நம்புங்கள். எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். வேலை வாய்ப்பு தேடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகள் இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சுப பலன்களை கொடுப்பதாக இருக்கும். இந்த வாரம் செவ்வாய் கிழமை விரதம் அனுசரித்து செவ்வாய்க்கிழமை அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் செவ்வாய்.
மேலும் படிக்க | Weekly Horoscope (November 7-13): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!
ரிஷபம்
உங்கள் எதிரிகள் இந்த வாரம் தோற்கடிக்கப்படுவார்கள். நீதிமன்றப் பணிகளில் வெற்றி பெறலாம். அதிர்ஷ்டம் ஓரளவுக்கு கை கொடுக்கும். குழந்தையின் தரப்பிலிருந்து ஆதரவு குறைவாக இருக்கும். தேர்வில் மாணவர்களின் வெற்றி அவர்களின் கடின உழைப்பைப் பொறுத்தது. அதாவது அதிர்ஷ்டம் இதில் பங்களிக்காது. முதலீடுகள் லாபத்தை கொண்டு வரும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். ஆனால் உங்கள் வாழ்க்கை துணையின் உடல்நிலை மோசமாக இருக்கலாம். நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாகவும் செயல்படக்கூடியதாகவும் இருக்கும். நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் நீங்கள் செய்த பல வேலைகள் தோல்வியடையலாம். இந்த வாரம் நீங்கள் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை வாரம் முழுவதும் ஜபிக்க வேண்டும். வாரத்தின் அதிர்ஷ்ட நாள் வெள்ளிக்கிழமை.
மிதுனம்
இந்த வாரம் உங்கள் ஜாதகத்தில், பணம் வருவதற்கான சிறந்த யோகம் உள்ளது. இந்த வாரம் உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு ஒத்துழைப்பார்கள். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவார்கள். அவருடைய படிப்பு நன்றாக நடக்கும். உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரலாம். சிறு விபத்துகளும் நடக்கலாம். நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகள் இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நவம்பர் 9, 10, 11 தேதிகளில் எந்த ஒரு வேலையையும் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். உங்கள் மற்றும் உங்கள் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திற்காக, இந்த வாரம், செவ்வாய் கிரகத்தின் சாந்திக்காக, சில பரிகாரங்களை செய்வது பலன் கொடுக்கும். வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் ஞாயிற்றுக்கிழமை.
கடகம்
இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியை அள்ளி வழங்கக் கூடிய ஏதேனும் ஒரு பொருளை வாங்கலாம். மகிழ்ச்சியைப் பெற உங்களுக்கு அற்புதமான யோகம் உள்ளது. அலுவலகத்தில் உங்கள் நிலை நன்றாக இருக்கும். எனினும், உங்கள் மேலதிகாரியுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பணம் பெறலாம். உங்கள் அதிர்ஷ்டம் கொஞ்சம் பலவீனமாக உள்ளது. உங்கள் உடல்நிலையில் சில பிரச்சனைகள் வரலாம். உங்கள் வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகள் பிறக்கும். நவம்பர் 7, 8 தேதிகளில் நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றியடையும். நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நீங்கள் சில பல பணிகளில் தோல்வியடையலாம். இந்த வாரம் நீங்கள் கருப்பு நாய்க்கு உணவு அளிப்பது நல்லது. வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் திங்கட்கிழமை.
சிம்மம்
கடந்த வாரத்தை விட இந்த வாரம் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். எனினும் பண வரவு குறைவாக இருக்கும். உடன்பிறந்தவர்களுடன் நல்லுறவு இருக்கும். குழந்தைகளுடனான உறவு குறையலாம். அதிர்ஷ்டம் குறைவாக இருக்கும். நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகள் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானது. இந்த தேதிகளில் நீங்கள் எந்த வேலை செய்தாலும், நீங்கள் முழுமையாக வெற்றி பெறுவீர்கள். இந்த வாரம் நீங்கள் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யவது சிறப்பான பலன்களைக் கொடுக்கும். வாரம் முழுவதும் ருத்ராஷ்டகத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் வியாழன்.
கன்னி
இந்த வாரம் உங்கள் உடல்நிலை சிறப்பாக இருக்கும். பணம் வரவழைக்கும் நல்ல யோகம் உண்டு. 9, 10, 11 ஆகிய தேதிகளில் பங்குகளில் பணத்தை முதலீடு செய்வது போன்றவற்றைச் செய்யலாம். விபத்துகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் வாழ்க்கை துணைக்கு உடல் வலி ஏற்படலாம். மகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். நவம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் பெரும்பாலான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வாரம் நீங்கள் வியாழன் அன்று விரதம் அனுசரித்து, வியாழன் அன்று பகவான் ராமச்சந்திரர் அல்லது கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்று அவரை வணங்குங்கள். வாரத்தின் அதிர்ஷ்டமான நாள் ஞாயிற்றுக்கிழமை.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் குரு பகவான்; இனி ‘இந்த’ ராசிகளின் தலைவிதி மாறும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ