Weekly Horoscope:  திங்கட்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையிலான வாரத்திற்கான ஜோதிட கணிப்பின்படி, 12 ராசிக்காரர்களின்  வார ராசி பலன்களை தெரிந்து கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் 
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வியாபார அபிவிருத்தி உண்டாகும்.  


ரிஷபம்


ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். வர்த்தகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். காப்பீடு சார்ந்த விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். 


மிதுனம் 
வாழ்க்கைத் துணைவரின் வழியில் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும்.  


கடகம் 


வெளிவட்டார பழக்கவழக்கங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளும் பயனுள்ளதாக இருக்கும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.  


மேலும் படிக்க | இப்படி கஷ்டத்தை அனுபவிச்சதேயில்ல! சனியுடன் இணையும் செவ்வாயின் தாக்கம்!


சிம்மம் 

குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடிவரும். அலுவலகத்தில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட சில தனவரவுகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் புதிய இலக்குகள் பிறக்கும்.


கன்னி
நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். திடீர் பயணங்களால் சேமிப்பு குறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுமை வேண்டும். பிறமொழி பேசும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான முதலீடுகளால் ஆதாயம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.  


துலாம் 


சக ஊழியர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களால் அனுகூலம் உண்டாகும். புதிய விஷயங்களில் நிதானத்தோடு செயல்படவும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனை சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கும்.  


விருச்சிகம் 
சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும்.  


தனுசு


வாகன வசதிகள் மேம்படும். தனுசு மேஷ ராசிக்காரர்கள் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பொன், பொருட்சேர்க்கை சார்ந்த சிந்தனை மேம்படும்.    


மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி அஸ்தமனம்.. இந்த ராசிகளுக்கு ராஜ குபேர பொற்காலம்


மகரம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நண்பர்களின் வழியில் உதவி கிடைக்கும். வியாபாரம் சார்ந்த பயணங்கள் அணுகூலமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். புதிய வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். 


கும்பம் 


கனிவான பேச்சுக்களால் மதிப்பு மேம்படும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சூழல் உண்டாகும்.  


மீனம்


முன்கோபத்தை குறைத்துக்கொள்ளவும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உதவி செய்வோரின் சுயரூபங்களை அறிவீர்கள். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் சில பாடங்களை கற்றுக்கொள்வீர்கள். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் சனி உச்சம்.. இந்த ராசிக்காரர்களுக்கு ராஜ பொற்காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ