Weekly Rasipalan (Jan 30- Feb 5): மேஷம் முதல் கன்னி வரையிலான வார பலன்கள்!

வாராந்திர ராசிபலன் 2023 (Weekly Horoscope): ஜனவரி 30ம் தேதியுடன் தொடங்கும் இந்த வாரத்தில், எந்த ராசிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும், எந்த ராசிகளுக்கு நிலைமை பாதகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வாராந்திர ராசிபலன் 2023: ஜனவரி 30ம் தேதியுடன் தொடங்கும் இந்த வாரத்தில், எந்த ராசிகளுக்கு நிலைமை சாதகமாக இருக்கும், எந்த ராசிகளுக்கு நிலைமை பாதகமாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள், மேலதிகாரி கொடுக்கும் வேலைகளை குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும், தாமதத்தால் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த வாரம் இளைஞர்கள் முன் போட்டி அதிகமாக இருக்கும். எதுவும் எளிதில் கிடைக்கப் போவதில்லை. எத்ற்கெடுத்தாலும் எரிச்சல் அடைந்து, கோபத்தையெல்லாம் குடும்ப உறுப்பினர்கள் மீது காட்டக்கூடாது, எப்படியும் கோபப்படுவது சரியல்ல. உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள், தேவைப்பட்டால், உங்கள் குடும்ப உறுப்பினர்களும் உங்கள் பக்கத்தில் நிற்பார்கள்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்கள் குழுத் தலைவர் பதவியில் இருப்பவர்கள், சக ஊழியர்களிடம் கடுமையான விதிமுறைகளை விதிக்கக் கூடாது. இந்த வாரம், தொழிலதிபர்களுக்கு மன அழுத்தத்தை கொடுப்பது மட்டுமின்றி, பணத்தட்டுப்பாடும், அதிக செலவுகளும் மனதை அலைக்கழிக்கும். குடும்பத்தில் நடக்கும் சிறு தவறுகளுக்கும் கோபப்படுவது சரியல்ல, மன்னிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். மூட்டுவலி நோயாளிகள் இந்த வாரம் வலியால் பாதிக்கப்படலாம். இளைஞர்கள் இந்த வாரத்தின் முதல் மூன்று நாட்களுக்கு அந்நியர்களுடன் பழகும் போது எச்ச்சரிக்கை தேவை.
மேலும் படிக்க | Weekly Rasipalan (Jan 30- Feb 5): துலாம் முதல் மீனம் வரையிலான வார பலன்கள்!
மிதுனம்
மிதுன ராசியின் சமூக அல்லது அரசியல் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும், இந்த வாரம் உங்கள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வர்த்தகர்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப சரக்கு இருப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். பொறியியல் துறையுடன் தொடர்புடைய இளைஞர்கள் வாரத்தில் சிறந்த வெற்றியைப் பெறலாம். தொடர்ந்து கடினமாக உழைக்கவும். குடும்பத்தில் கசப்பான உறவுகளை ஏற்படுத்துவது சரியல்ல, உறவை மேம்படுத்த முயற்சிகள் எடுக்க வேண்டும். உடல்நலம் விஷயத்திலும், மருந்துகள் விஷயங்களிலும் அலட்சியம் இருக்கக்கூடாது.
மேலும் படிக்க | Astro: 16 ஆண்டுகள் நீடிக்கும் குரு மகாதிசை! பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரம் வேலையில் மிகவும் பிஸியாக இருப்பார்கள் திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பகா செயல்படலாம். ஹோட்டல் மற்றும் உணவக வணிகத்துடன் தொடர்புடையவர்கள் எந்த விஷயத்திலும் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் சிக்கலைச் சந்திக்க வேண்டியிருக்கும். இந்த வாரம் இளைஞர்களுக்கு ஆன்மிகமாக இருக்கும். சில ஆன்மீக புத்தகங்களை படிப்பதோடு, ஏதாவது ஒரு மத ஸ்தலத்திற்கும் செல்லலாம். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுங்கள் மற்றும் தாயையும் தெய்வத்தையும் வணங்குங்கள். மன அமைதி மற்றும் ஆன்மிக நன்மை உண்டாகும். தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள், கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் பணியிடத்தின் முக்கியமான கூட்டங்களில் பங்கேற்கவும், முன்னேற்பாடுகளை செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்க இந்த வாரம் அரசின் எந்த ஒரு திட்டத்தையும் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும். இளைஞர்களின் சோம்பேறித்தனத்தை முன்னேற்றத்தின் எதிரியாகக் கருதி, அதிலிருந்து என்றென்றும் விலகிச் செயல்படுங்கள். இந்த வாரம் குடும்ப உறவுகள் பலவீனமடைய வேண்டாம், இந்த வாரம் உற்சாகம் நிறைந்ததாக இருக்கும். பழைய அல்லது கெட்டுப்போன உணவை உண்பது உங்கள் ஆரோக்கியத்தில் சரிவை ஏற்படுத்தும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அலுவலகப் பணிகளில் எந்த வித தவறும், அலட்சியமும் செய்யக் கூடாது, அவ்வாறு செய்வது கனமானதாக இருக்கும். இளைஞர்களுக்கு இந்த வாரம் ஆற்றல் நிறைந்ததாக இருக்கும், எனவே உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். வீட்டுப் பிரச்சனைகளில் உண்மை தெரியாமல் ஒருதலைப்பட்சமான கருத்தை உருவாக்காதீர்கள், இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளலாம். உடல்நலம் சீராக இருக்க, மருந்துகளை சீராக எடுத்துக் கொள்வதுடன், மனக் கவலைகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அஸ்மனமாகும் சனி இந்த ராசிகளுக்கு புது விடியலை தரும்: பணக்கார யோகம் உருவாகும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ