Pithru Dosham | பித்ரு தோஷம் என்றால் என்ன? அது நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்
Pithru Dosham | ஜோதிடத்தின்படி ஒருவருக்கு பித்ரூ தோஷம் இருப்பதை அறிந்து கொள்வது எப்படி?, அந்த தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Pithru Dosham Parikaram : ஜோதிடத்தின்படி பல சமிக்கைகளை வைத்து ஒருவருக்கு பித்ருதோஷம் இருப்பதை அறிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் நீங்கள் பித்ரு தோஷம் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும். பித்ரு தோஷம் என்பது முன்னோர்களுக்கு இறப்பின்போது முறைப்படி செய்யாமல் விட்ட சடங்குகளால் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல், முன்ஜென்ம பாவங்கள், முன்னோர் பாவங்கள், பிறர் விட்ட சாபங்கள் எல்லாம் சேர்ந்து தான் பித்ரு தோஷமாகிறது. இந்த தோஷத்தில் இருந்து எளிய பரிகாரங்கள் மூலம் விமோச்சனம் பெற்றுக் கொள்ளலாம்.
பித்ரு தோஷம் காட்டும் அறிகுறிகள்
ஒருவருக்கு பித்ரு தோஷம் இருந்துவிட்டால் குடும்பத்தில் நிம்மதியே இருக்காது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகளாகவே இருக்கும். இருவரும் பிரிந்து வாழக்கூட நேரிடும். தம்பதிகளுக்கு குழந்தயின்மை இருக்கும். பிறந்த குழந்தை சிசுவிலேயே இறக்க நேரிடும். தொழில் எல்லாம் கடனில் சிக்கிக் கொள்ளும். எந்த செயலை செய்தாலும் முன்னேற்றத்துக்கு பதிலாக 10 அடி சறுக்கலையே சந்திப்பார்கள். திருமண சிக்கல்கள் இருக்கும். எதிர்பாராத நிதி இழப்புகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் பல பிரச்சனைகள் உருவாகும். மன நலம் சார்ந்த பிரச்சனைகள், சொத்து பிரச்சனைகள் எல்லாம் இருக்கும். இவை எல்லாமே பித்ரு தோஷத்தால் உருவாகும் பிரச்சனைகள் தான். இந்த தோஷத்தில் இருந்து விமோச்சனம் பெற பரிகாரம் இல்லையா? என்று கேட்டால் எளிய பரிகாரங்களே இருக்கின்றன. அதனை செய்தாலே போதும்.
மேலும் படிக்க | ஐப்பசி சனிக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு நன்மைகள் காத்திருக்கு...!
பித்ரு தோஷம் நீங்க பரிகாரம்
பித்ரு தோஷம் இருப்பவர்கள் அமாவாசை விரதம் இருக்க வேண்டும். ஆறு குளங்களில் குளித்து அருகில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். சாபம், பாவங்கள் நீங்க இதை மூன்று அமாவாசைகள் தொடர்ந்து செய்யுங்கள். தர்ப்பணம் கொடுத்தபிறகு அருகில் இருக்கும் சிவாலயங்களுக்கு சென்று சிவனை மனமுருகி வேண்டி வழிபாடு நடத்துங்கள். அதன்பிறகு வருடந்தோறும் வரும் மகாளயபட்சத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுங்கள். ஆடி, தை உள்ளிட்ட உங்களுக்கு உகந்த மாதங்களில் வரும் அமாவாசைகளில் ராமேஸ்வரம், காசி, கூடுதுறை, கொடுமுடி போன்ற பரிகார தலங்களுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். உங்களால் முடிந்த அன்னதானம் செய்யுங்கள். ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். சனிக்கிழமை தோறும் வீட்டில் விரதம் இருந்து முன்னோர் வழிபாடு செய்து காகங்களுக்கு உணவளிக்கவும். பிரதோஷ வழிபாடு தொடர்ச்சியாக செய்து வாருங்கள். குலதெய்வ வழிபாடும் அவசியம்.
பித்ரு தோஷம் விலகினால் செல்வம் பெருகும்
இந்த வழிபாடுகளை நீங்கள் தொடர்ச்சியாக செய்து வந்தாலே உங்கள் வாழ்க்கையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் தெரியும். இழந்த செல்வங்களை மீட்க வாய்ப்புகள் உருவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். மன மகிழ்ச்சி பெருகும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் எல்லாம் நீங்க, எல்லோரும் ஒன்றாக இருப்பீர்கள். வாழ்க்கையே முன்பிருந்ததை விட இப்போது ஒருபடி மேலானதாக இருக்கும். தொழில் கைகூடும். நிதிச் சிக்கல்கள் எல்லாம் இருக்கவே இருக்காது. ஒட்டுமொத்தமாக எல்லா பிரச்சனைகளும் உங்களை விட்டு ஓடி நல்ல காலம் பிறந்திருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது நம்பிக்கையோடு இந்த பரிகாரங்களை செய்தால் போதும்.
மேலும் படிக்க | ஐப்பசி ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்: இன்று இந்தெந்த ராசிகளுக்கு லாபம் அதிகரிக்கும்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ