செல்வந்தராக்கும் லட்சுமி குபேர பூஜையை எளிமையாக செய்யும் முறை!
பண வரவு அதிகரிக்கவும், செல்வம் செழிப்புடன் இருக்கவும் அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால் தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும்.
இன்றைய கால கட்டத்தில் பணத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. செலவுகள் அதிகரித்து விட்டன. எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. இந்நிலையில், பண வரவு அதிகரிக்கவும், வீண் விரைய செலவுகளை தடுக்கவும், செல்வம் செழிப்புடன் இருக்க பொதுவாக அன்னை லட்சுமி தேவியை வழிபடும் பழக்கம் உள்ளது. ஆனால் தேவி மகாலட்சுமியின் வழிபாட்டுடன் கூடவே குபேரரையும் வழிபடுவது அபரிமிதமான பலன்களைத் தரும். மகாலக்ஷ்மி வணங்கினால் மட்டும் போதாது, செல்வத்தின் கடவுளான குபேரரையும் மகிழ்விக்க வேண்டும் என ஆன்மீக நம்பிக்கைகள் கூறுகின்றன. செல்வத்தின் கடவுளான குபேரை எப்படி மகிழ்விப்பது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குபேர பூஜை செய்யும் முறை
சாதாரணமாக வீட்டில் குபேர பூஜை செய்வது என்றால், பூஜை அறையில் லட்சுமி குபேர படத்தினை வைத்து குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து, அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். அதற்கு நடுவில் கலசம் ஒன்றை வைக்க வேண்டும். அதில் வெளியில் மச்சள் பூசி குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பில் மஞ்சள் கலந்த நீரை நிரப்பி, பின் மாவிலை சொருகி அதன்மேல் தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
குபேர மந்திரம் ஜபித்தல்
பின்னர் விநாயகர் பாடல் அல்லது சுலோகங்களை பாடி பூஜையை தொடங்க வேண்டும். பின் மகாலட்சுமியை பாடல் அல்லது சுலோகங்களை ஜபித்து வழிபட வேண்டும். பின்னர் 'ஓம் ஸ்ரீம், ஓம் ஹ்ரீம் ஶ்ரீம், ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் வித்தேஎஷ்வராய: நமஹ' ( 'ॐ श्रीं, ॐ ह्रीं श्रीं, ॐ ह्रीं श्रीं क्लीं वित्तेश्वराय: नमः' ) என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். தாமரை மலர் குபேரனுக்கு மிகவும் பொடித்த மலர் என்பதால், அதனை கொண்டு அர்ச்சனை செய்வது சிறப்பு.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சியும் ஹம்ச பஞ்ச மகா புருஷ யோகமும்! ராஜ யோகம் பெறும் ‘சில’ ராசிகள்!
குபேர யந்திர வழிபாடு
குபேர் யந்திரத்தை வழிபடுவதும் குபேர பகவானை மகிழ்விக்கும். குபேர் யந்திரத்தை தங்கம், வெள்ளி அல்லது பஞ்சலோகம் ஆகிய மூன்று உலோகங்களில் ஏதேனும் ஒன்றில் வாங்கி வரவும். அதன் பிறகு தினமும் இந்த யந்திரத்தை வழிபடவும். முதலில் வழிபடும் இடத்தை சுத்தம் செய்து, குபேர யந்திரத்தை வைக்கவும். பின்னர் இந்த யந்திரத்தில் அட்சதையால் அர்ச்சனை செய்யவும். இதற்குப் பிறகு சங்கல்பம் செய்து கொண்டு குபேரனை வணங்கி, மேலே குறிப்பிட்டுள்ள குபேர மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும்.
குபேர வழிபாடு
செல்வத்தின் கடவுளான குபேர் பூஜையை தினமும் செய்யலாம். அப்படி முடியவில்லை என்றால், சில குறிப்பிட்ட தேதியிலும் வழிபாடு செய்வதும் பலனைத் தரும். அமாவாசையின் 13வது நாளான திரயோதசி நாளில் காலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையாக பூஜை செய்ய வேண்டும். இதைச் செய்வதன் மூலம், செல்வத்தின் கடவுளான குபேர் மகிழ்ச்சி அடைகிறார் உங்களது பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ