மஞ்சள் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ஒரு அற்புதமான பொருள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சளில் குர்குமின் உள்ளதால், பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது. வலியை போக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இருப்பினும், மஞ்சள் அதிகம் எடுத்துக் கொள்வதால், சில ஆரோக்கிய பிரச்சனை உள்ளவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில உடல் நல பிரச்சனைகள் இருப்பவர்கள் மஞ்சளை உட்கொள்வதில் மிகுந்த கவனம் தேவை. இதைச் செய்யாவிட்டால், மஞ்சளால் ஏற்படும் பக்கவிளைவுகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்.
மஞ்சள் காமாலை நோயாளிகள்
மஞ்சள் காமாலை நோயாளிகள் மஞ்சள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் மஞ்சள் காமாலை பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை சாப்பிடக்கூடாது. மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்ட பிறகும், மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே மஞ்சள் உட்கொள்வது பற்றி எந்த முடிவும் எடுக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
பித்தப்பையில் கல் உள்ள நோயாளிகள்
பித்தப்பையில் கல் பிரச்சனையினால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் எடுத்துக் கொள்வதில் எச்சரிக்கையாக இருங்கள். கல் உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும். உண்மையில், அடிக்கடி கல் பிரச்சனையினால் பாதிக்கப்படுபவர்கள், மஞ்சளை உட்கொள்வதால், இந்த பிரச்சனையை தீவிரபடுத்தும். எனவே, அவர்கள் மஞ்சளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதை முடிந்தவரை குறைத்துக் கொள்வது நல்லது. மேலும், அதனைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகளின் கவனத்திற்கு! நீரிழிவு மேலாண்மைக்கு உகந்த பழங்கள்!
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் உள்ளவர்கள் மஞ்சளை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும். இதற்குக் காரணம், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், மஞ்சளை அதிகமாக உட்கொள்வது உடலில் உள்ள இரத்தத்தின் அளவைக் குறைக்கும். இதனால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.
இரத்தம் உறைவதில் பிரச்சனை உள்ளவர்கள்
மஞ்சள் அதிகம் உட்கொள்வதால், இரத்தப் போக்கு பிரச்சனை அதிகரிக்கிறது
இரத்தம் உறைதல் செயல்முறையை மஞ்சள் மந்தமாக்குறது. எனவே, திடீரென மூக்கில் அல்லது உடலின் மற்ற பாகங்களில் இருந்து ரத்தம் வெளியேறும் பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை உட்கொள்வதை மிகவும் குறைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் இதை எல்லாம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்: டயட் பிளான் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ