Astro: `இந்த` ராசிகளை வாழ்க்கைத் துணையாக அடைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்!
Zodiacs Who Will be Perfect Life Partners: அனைவருக்கும், தன் மனதிற்கு பிடித்த இனிய வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று விருப்பம் இருக்கும். மிகவும் உண்மையான, ஆழமாக நேசிக்கும் ஒரு வாழ்க்கை துணை அமைந்தால், சந்தோஷமான வாழ்விற்கு குறைவு இருக்காது.
Astro Traits in Tamil: அனைவருக்கும், தன் மனதிற்கு பிடித்த இனிய வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று விருப்பம் இருக்கும். மிகவும் உண்மையான, ஆழமாக நேசிக்கும் ஒரு வாழ்க்கை துணை அமைந்தால், சந்தோஷமான வாழ்விற்கு குறைவு இருக்காது. அந்த வகையில் சில ராசிக்காரர்கள் காதலில் மிகவும் உண்மையாக இருப்பார்கள் எனவும், இவர்கள் தங்கள் வாழ்க்கை துணையை எந்த நேரத்திலும் கைவிடாமல் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ராசிகள் எவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்கான அதிபதி சுக்கிரன். எனவே இவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாகவும் மதிப்பு மிக்கவர்களாகவும் இருப்பார்கள். உங்களால் இவர்களை தவிர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு ஆளுமை பண்பு இவர்களிடம் இருக்கும். மற்றவர்களை தன் வசம் இருப்பதில் இவர்களுக்கு இணை யாரும் இல்லை. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் இவர்களுக்கு, ஆன்மீகத்தின் மீது பற்று இருக்கும். நினைத்த நேரத்தில் மனதை மாற்றிக் கொள்ளும் எண்ணம் இவர்களிடம் ஒருபோதும் இருக்காது. தான் எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்கள். எந்தவித பிரச்சனையையும் அன்புடன் தீர்க்க வேண்டும் என்று நினைப்பார்கள். இந்த ராசியை மணந்து கொள்பவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி.
மிதுன ராசி
மிதுன ராசிக்கான அதிபதி புதன். இதனால் விவேகத்திற்கு குறைவே இருக்காது. தனது பேச்சு திறன் மூலம் எதிரியை வசப்படுத்தும் திறன் உண்டு. வாழ்க்கைத் துணை என்றால் கேட்கவே வேண்டாம். தன் வசப்படுத்தி அவர்களை தன் அன்பால் கட்டிப்போட்டு விடுவார்கள். ஆடம்பரமான வாழ்க்கை வாழ விரும்பும் இவர்கள், தங்கள் வாழ்க்கை துணைக்கு சகல விதமான வசதியையும் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். வாழ்க்கைத் துணையின் மனதை அறிந்து, அவர்கள் கேட்காமலேயே அனைத்து முடித்துக் கொடுக்கும் திறன் இவர்களிடம் உண்டு.
துலாம் ராசி
துலாம் ராசியினருக்கு அதிபதி சுக்கிரன். இதனால் இவர்கள் இரக்கம் மிக்கவர்களாகவும், காதலில் நேர்மையாகவும் இருப்பார்கள். தங்கள் வேலையைப் போலவே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இவர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்களை மணந்து கொள்பவர்களுக்கு, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். சண்டை ஏற்பட்டாலும் அதனை நீட்டிக்காமல், திறமையாக சமாதானம் செய்து பிரச்சனையை முடித்து வைப்பார்கள்.
மேலும் படிக்க | குலதெய்வத்தை எப்படி வணங்கினால் வாழ்வில் வளம் பெறலாம்? தெரிந்துக் கொள்ளவேண்டியவை...
கன்னி ராசி
கன்னி ராசியினருக்கு புதனின் தாக்கத்தால், புத்தி கூர்மை மிக்கவர்களாகவும், தெளிவாக பேசக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இதனால் இவர்கள் மீது எல்லோருக்குமே ஒரு ஈர்ப்பு இருக்கும். இவர்களது ஆளுமை பண்புகள் காரணமாக, தன்னை நோக்கி அனைவரையும் ஈர்க்கும் சக்தி இவர்களுக்கு உண்டு. தனது காதல் துணையிடம் தனது மனதின் உள்ள விஷயங்களையும் தனது அன்பையும், வெளிப்படுத்த என்றுமே தயங்க மாட்டார்கள். இவர்களது வெளிப்படை தன்மை காரணமாக, இவர்களைப் புரிந்து கொள்வதும் எளிது. இதனால் இவர்களை திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் ஏற்படாது. கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. இவர்களை திருமணம் செய்து கொள்பவர்கள் உண்மையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
கும்ப ராசி
கும்ப கும்ப ராசியை ஆளும் கிரகம் சனி பகவான். எனவே இவர்கள் வாழ்க்கையில் என்றுமே நிரந்தரம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். நினைத்தபடி, சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மனதை மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஒருவரை காதலித்தால், அவரை தன் உயிருக்கு உயிராக காதலிப்பார்கள். எந்த விதத்திலும் அவர் மனதை காயப்படுத்த நினைக்க மாட்டார்கள். கும்ப ராசியினர் நிதி ரீதியாக எப்போதுமே வலுவாகவே இருப்பார்கள். இதனால் தனது வாழ்க்கை துணைக்கு வேண்டிய வசதி வாய்ப்புகள் அனைத்தையும் செய்து கொடுக்க அவர்கள் தயங்குவதில்லை. மேலும் தான் தவறு ஏதும் செய்து விட்டால், அதற்கு சாக்கு போக்கு சொல்லாமல், ஒப்புக்கொண்டு நேர்மையாக இருப்பார்கள். தன்னைப் போன்றே தனது வாழ்க்கை துணையும் தன்னிடம், உண்மை எதையும் மறைக்கக் கூடாது என்று நினைப்பார்கள்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவும்..
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!