விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 5 முறை சாம்பியன் வீனஸ் வில்லியம்சை 15-வயது சிறுமி தோற்கடித்த சம்பவம் டென்னிஸ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகிறது. இதில் மிக உயரியதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த ஜூலை 1 துவங்கி நடைப்பெற்று வருகிறது.


இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில்  5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற வீனஸ் வில்லியம்சும், அமெரிக்காவின் 15 வயது கோரி காபும் மோதினர்.



பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீனஸை தோற்கடித்து வெளியேற்றினார் கோரி காப்.


"கோகோ" என்ற புனைப்பெயர் கோரி காப், திறந்த வரலாற்றில் விம்பிள்டனின் பிரதான இலக்கை அடைய தகுதி நடப்பு தொடரில் களம்காணும் இளைய வீரர் ஆவார், அவரது வெற்றி பயணம் இளிமையாக தொடங்கிவிடவில்லை., அதேப்போல் அவரது வெற்றி பயணம் 39-வயது வில்லியம்ஸை வீழ்த்தியோதும் நின்றுவிட போவதில்லை.


தனது வெற்றியை குறித்து பதிவு செய்த கோரி காப்., "இந்த வெற்றியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இதுநாள் வரை விளையாடிய போட்டிகளுக்கு பின்னர் நான் அழுததில்லை., முதன்முறையாக வில்லியம்ஸை தோற்கடித்து அழுதுள்ளேன்" என குறிப்பிட்டு பேசினார்.