சவுத்தாம்டன்: 2019 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி ஆடிய ஆட்டத்தில் தோல்வியை சந்திக்காத அணியாக வலம் வருகிறது. நேற்று நடந்த போட்டியிலும் வெற்றி பெற்று பட்டியலில் முன்னேறி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது விளையாடியது. 


இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் ராகுல் களமிறங்கினர். தொடக்க வீரர் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனர். அவரை அடுத்து களமிறங்கி கேப்டன் விராட் கோலி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினனார். இந்திய கேப்டன் விராட் மற்றும் கேதார் ஜாதவ் தவிர மற்ற வீரர்கள் 30 ரன்களை கூட தாண்டததால், இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் மட்டும் எடுத்தது. விராட் 67(63) மற்றும் கேதார் ஜாதவ் 52(68) ரன்கள் எடுத்தனர்.


225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நபி 52 ரன்கள் எடுத்தார். 


கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார் முகமது ஷமி. ஆட்ட நாயகன் விருது பும்ராவுக்கு வழங்கப்பட்டது.