29 லீக் போட்டிகள் நிறைவு: ஐசிசி உலகக் கோப்பை அட்டவணையில் யார் எந்த இடத்தில்?
29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், எந்த அணி எந்த இடத்தில் உள்ளது என்று பாப்போம்...!!
புது டெல்லி: இங்கிலாந்து: 2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கிறது. அதில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகள் ஆகும். மொத்தம் 48 போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் அவுட் போட்டிகள் என மொத்தம் 12 நகரங்களில் நடக்கிறது.
இதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று 30 & 31 ஆவது லீக் போட்டி நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற இரண்டு ஆட்டங்களில், ஒன்றில் இந்தியாவும், மற்றொன்றில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றது.
தற்போதைய நிலவரப்படி, எந்த அணி எந்த இடத்தில உள்ளது. இதுவரை எத்தனை ஆட்டங்களில் ஆடி உள்ளனர். அவர்களின் புள்ளிகள் எவ்வளவு என்று பார்போம்..!!
வரிசை | அணி | ஆட்டம் | வெற்றி | தோல்வி | முடிவு இல்லை | புள்ளி |
1. | நியூசிலாந்து | 6 | 5 | 0 | 1 | 11 |
2. | ஆஸ்திரேலியா | 6 | 5 | 1 | 0 | 10 |
3. | இந்தியா | 5 | 4 | 0 | 1 | 9 |
4. | இங்கிலாந்து | 6 | 4 | 2 | 0 | 8 |
அதிக ரன்கள் அடித்த முதல் 5 பேட்ஸ்மேன்கள்:
1. டேவிட் வார்னர் - ஆஸ்திரேலியா - 6 போட்டிகளில் 447 ரன்கள், 2 சதம், 2 அரைசதம், சிறந்த இன்னிங்ஸ் - 166 ரன்கள்.
2. ஷாகிப் அல் ஹசன் - பங்களாதேஷ் - 5 போட்டிகளில் 425 ரன்கள், 2 சதம், 2 அரைசதம், சிறந்த இன்னிங்ஸ் - 124* ரன்கள்.
3. ரூட் - இங்கிலாந்து - 6 போட்டிகளில் 424 ரன்கள், 2 சதங்கள், 3 அரைசதங்கள், சிறந்த இன்னிங்ஸ் - 107 ரன்கள்
4. ஆரோன் பிஞ்ச் - ஆஸ்திரேலியா - 6 போட்டிகளில் 396 ரன்கள், 1 சதம், 3 அரைசதம், சிறந்த இன்னிங்ஸ் - 153 ரன்கள்.
5. கென் வில்லியம்சன் - நியூசிலாந்து - 373 ரன்கள், 2 சதங்கள், 1 அரைசதம், சிறந்த இன்னிங்ஸ் - 6 போட்டிகளில் 148 ரன்கள்
அதிக விக்கெட் எடுத்த முதல் 5 பந்து வீச்சாளர்கள்:
1. ஜோப்ரா ஆர்ச்சர் - (இங்கிலாந்து) - 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.
2. மிட்செல் ஸ்டார்க் - (ஆஸ்திரேலியா) - 6 போட்டிகளில் 15 விக்கெட்டுகள்.
3. லக்கி பெர்குசன் - (நியூசிலாந்து) - 5 போட்டிகளில் 14 விக்கெட்டுகள்.
4. முகமது அமீர் - (பாகிஸ்தான்) - 4 போட்டிகளில் 13 விக்கெட்டுகள்.
5. மார்க் வூட் - (இங்கிலாந்து) - 5 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்.