இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019-ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்தது.. உலகக் கோப்பை அரையிறுதியில் ரசிகர்களை ஏமாற்றியதை தவிர்த்து, பல போட்டிகளை வென்றெடுத்த ஆண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன்மூலம் உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இந்த ஆண்டை முடித்தது இந்திய கிரிக்கெட் அணி. ஆனால் நடப்பு ஆண்டு இதேப்போல் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தருமா?... இல்லை சவாலாக அமையும்?


நடப்பு ஆண்டில் நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா தங்களது இடத்தை தக்கவைத்துக்கொள்ள அதிகம் மெனக்கிட வேண்டி இருக்கும் என கருதப்படுகிறது. மேலும், டி20 உலகக் கோப்பை தொடரில் ICC பட்டத்தை வென்றெடுக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை எல்லாம் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக பயன்படுத்திகொள்ளுமா?... பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


சரி., 2020-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி எங்கெங்கு, எந்தெந்த போட்டிகளில் விளையாடுகிறது தெரியுமா?... முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


  • இலங்கை இந்திய சுற்றுப்பயணம் (ஜனவரி 5 - ஜனவரி 10)


இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருடன் இந்தியா இந்த ஆண்டை துவங்குகிறது. இது ஜனவரி 5 முதல் ஜனவரி 10, 2020 வரை நடைபெறும். தேதி மற்றும் இடங்கள் பின்வருமாறு:


ஜனவரி 5, இடம்: பராஸ்பரா ஸ்டேடியம், குவஹாத்தி
ஜனவரி 7, இடம்: ஹோல்கர் ஸ்டேடியம், இந்தூர்
ஜனவரி 10, இடம்: எம்.சி.ஏ ஸ்டேடியம், புனே


  • ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (ஜனவரி 14 - ஜனவரி 19)


இலங்கைக்கு எதிரான தொடரைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு வருகை தருகிறது.


ஜனவரி 14, இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை
ஜனவரி 17, இடம்: சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியம், ராஜ்கோட்
ஜனவரி 19, இடம்: எம்.சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூர்


  • இந்தியாவின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் (ஜனவரி 24 - மார்ச் 4)


ஒரு மாத கால அனைத்து வடிவத் தொடரிலும் இந்தியா நியூசிலாந்திற்குச் செல்கிறது. இதில் 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டி ஆகியவை அடங்கும்.


ஜனவரி 24, 1-வது டி20; இடம்: ஈடன் பார்க், ஆக்லாந்து
ஜனவரி 26, 2-வது டி 20; இடம்: ஈடன் பார்க், ஆக்லாந்து
ஜனவரி 29, 3-வது டி 20; இடம்: செடான் பார்க், ஹாமில்டன்
ஜனவரி 31, 4-வது டி20; இடம்: வெஸ்ட்பேக் ஸ்டேடியம், வெலிங்டன்
பிப்ரவரி 2, 5-வது டி20; இடம்: பே ஓவல், மவுண்ட் மௌன்கானுய்
பிப்ரவரி 5, 1-வது ஒருநாள்; இடம்: செடான் பார்க், ஹாமில்டன்
பிப்ரவரி 8, 2-வது ஒருநாள்; இடம்: ஈடன் பார்க், ஆக்லாந்து
பிப்ரவரி 11, 3-வது ஒருநாள்; இடம்: பே ஓவல், மவுண்ட் மௌன்கானுய்
பிப்ரவரி 21, 1-வது டெஸ்ட்; இடம்: வெஸ்ட்பேக் ஸ்டேடியம், வெலிங்டன்
பிப்ரவரி 29, 2-வது டெஸ்ட்; இடம்: ஹாக்லி ஓவல், கிறிஸ்ட்சர்ச்


  • தென்னாப்பிரிக்கா இந்தியா சுற்றுப்பயணம் (மார்ச் 12 - மார்ச் 18)


நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் பலபறிட்சை மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 12 முதல் மார்ச் 18, 2020 வரை நடைபெறும்.


மார்ச் 12, 1 வது ஒருநாள்; இடம்: ஹெச்பிசிஏ ஸ்டேடியம், தர்மசாலா
மார்ச் 15, 2 வது ஒருநாள்; இடம்: அடல் பிஹாரி வாஜ்பாய் ஸ்டேடியம், லக்னோ
மார்ச் 18, 3 வது ஒருநாள்; இடம்: ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா


  • இந்தியன் பிரீமியர் லீக் 2020 (மார்ச் 28 - மே 24)


ஐபிஎல் 13-வது சீசன் மார்ச் மாத இறுதியில் தொடங்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


  • இலங்கையின் இந்திய சுற்றுப்பயணம் (ஜூலை)


இந்த சுற்றுப்பயணத்தின் அதிகாரப்பூர்வ தேதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கு இலங்கைக்கு பயணிக்க முடிவு செய்துள்ளது.


  • ஆசியா கோப்பை (செப்டம்பர்)


பாகிஸ்தானில் ஆசிய கோப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தொடர்குறித்து இந்தியாவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை. அறிக்கையின்படி, அவர்களின் பங்கேற்பு நிலையைப் பற்றி சிந்திக்க வாரியம் ஜூன் மாதம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  • இங்கிலாந்தின் இந்திய சுற்றுப்பயணம் (செப்டம்பர் - அக்டோபர் 2020)


நவம்பர் மாதத்தில் ICC டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இங்கிலாந்து இந்தியாவுக்கு விஜயம் செய்யும். போட்டி தேதிகள் குறித்த அறிவிப்பு தற்போது உறுதிபடுத்தப்படவில்லை.


  • ICC டி20 உலகக் கோப்பை 2020 (அக்டோபர் - நவம்பர் ஆஸ்திரேலியாவில்)


ICC பட்டத்தை வெல்வது ஒரு ‘இரத்தக்களரி ஆவேசம்’ என்றும் இது டீம் இந்தியாவுக்கு மற்றொரு ஷாட் என்றும் ரவி சாஸ்திரி ஏற்கனவே கூறியுள்ளார்.


  • இந்தியாவின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் (நவம்பர் 2020 - டிசம்பர் 2020)


உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்தியா ஆஸ்திரேலியாவில் தங்கி, நான்கு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் புரவலர்களுக்கு எதிராக விளையாடும். இதில் ஒரு பிங்க் பந்து டெஸ்டும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.