FIFA 2022: ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கால்பந்து போட்டி! கானா இறுதிச் சுற்றுக்கு செல்லுமா?
கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இரண்டாவது லெக்கில் கானாவுடன் விளையாடும் போது நைஜீரியா மிகுந்த அழுத்தத்தில் இருக்கும்
அக்ரா ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 27, 2022 அன்று இரண்டு போட்டிகளை நடத்த உள்ளது.
கானா மற்றும் எத்தியோப்பியா இடையேயான FIFA U-20 மகளிர் உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஒன்று.மற்றொன்று, ஹார்ட்ஸ் ஆஃப் ஓக் மற்றும் எல்மினா ஷார்க்ஸ் எஃப்சி இடையேயான MTN FA கோப்பை ரவுண்ட் 16 போட்டி ஆகும்.
கடந்த சீசனில் அபார வெற்றி பெற்ற ஃபோபியன்கள் மீண்டும் இந்த கோப்பையை வெல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
இதற்கிடையில், பிரின்சஸ், ஆகஸ்ட் 2022 இல் கோஸ்டாரிகாவில் நடைபெறும் FIFA U-20 மகளிர் உலகக் கோப்பைக்கான தகுதியை பதிவு செய்ய உள்ளனர்.
போட்டிகளைக் காண விரும்பும் ரசிகைகள் மாநாட்டு மைய வாயிலை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் படிக்க | 2023 ஆசியக் கோப்பை தகுதிச் சுற்று போட்டிகள் இந்தியாவில்!
வெள்ளிக்கிழமை குமாசியில் உள்ள பாபா யாரா ஸ்டேடியத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டி, கோல் ஏதுமின்றி டிராவில் முடிந்தபோதிலும், பிளாக் ஸ்டார்ஸ் தலைமை பயிற்சியாளர் ஓட்டோ அடோ, கத்தாரில் நடக்கும் உலகக் கோப்பை பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கால்பந்து போட்டி தொடர்பாக எழுந்திருக்கும் பல்வேறுவிதமான ஊகங்களுக்கு மத்தீய்ல், கானா மற்றும் நைஜீரியா இடையில் குமாசியில் விளையாடியது. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.
இதையடுத்து அபுஜாவில் உள்ள மொஷூட் அபியோலா ஸ்டேடியத்தில் செவ்வாய் அன்று நடைபெறவிருக்கும் இரண்டாவது லெக்கில் மற்றொரு கடுமையான போட்டி நடைபெறவிருக்கிறது.
ஜனவரி மாதம் கேமரூனில் நடந்த ஆப்பிரிக்கா கோப்பை நாடுகளின் 33வது பதிப்பில் இரு நாடுகளும் கால்பந்து போட்டியில் ஏமாற்றமளித்தன. இந்த நிலையில், உலகக் கோப்பைக்கான டிக்கெட் என்பது அவர்களின் மோசமான நிலைமையை சீர் செய்யும்.
இந்த நிலையில், ஆட்டத்திற்குப் பிந்தைய செய்தி மாநாட்டில் பேசிய கானா அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஓட்டோ அடோ, உலகக் கோப்பை தகுதிச் சுற்றின் இரண்டாவது லெக்கில் கானாவுடன் விளையாடும் போது நைஜீரியா மிகுந்த அழுத்தத்தில் இருக்கும் என்று கூறுகிறார்.
முதல் லெக்கின் முடிவுகளால் அபுஜாவில் தங்கள் ரசிகர்கள் முன்னிலையில் நைஜீரியாவுக்கு அழுத்தம் இருக்கும் என்று கூறினார்.
மேலும் படிக்க | ‘அந்த’ பிளேயர்தாங்க ரொம்பப் பயம் காட்டுறாரு: கே.எல். ராகுல் ஓபன் டாக்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR